இன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் இன்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், மோகன்லால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து காமன் டீபியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா குமார் தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழில் "இது என்ன மாயம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

க்யூட்டான அசைவுகளையும்

க்யூட்டான அசைவுகளையும்

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், ஆர்ஜே பாலாஜி என பலர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி இருந்தார். ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த "ரஜினி முருகன்" வேற லெவல் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் சிறு சிறு க்யூட்டான அசைவுகளையும் கவனித்த ரசிகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

ரஜினிமுருகன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த கீர்த்தி சுரேஷ் அதேசமயம் தெலுங்கிலும் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

விருதுகளில் நனைந்தார்

விருதுகளில் நனைந்தார்

பிரபலமான ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு வந்த கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "நடிகையர் திலகம்" படத்தில் தத்துரூபமாக நடித்தது மட்டுமல்லாமல் சாவித்ரியை கண்முன்னே கொண்டுவந்து காட்டியதற்காக முதலில் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளில் நனைந்தார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

நடிகையர் திலகம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து பெண் குயின் திரைப்படத்தில் அதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்க இப்பொழுது குட்லக் சகி, மிஸ் இந்தியா என லீட் ரோலில் நடித்து அசத்தி வரும் கீர்த்தி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மரக்கார், அண்ணாத்தே, ரங் தே, சாணி காகிதம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக களமிறங்கி

நடிகராக களமிறங்கி

இதுவரை சிறந்த இயக்குனராக நம் அனைவரும் பார்த்து வந்த செல்வராகவன் முதன்முறையாக நடிகராக களமிறங்கி இருக்கும் சாணி காகிதம் திரைப்படத்தில் அவரும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு தென்னிந்தியாவில் அனைவரும் விரும்பும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் அனைவரையும் கொள்ளையடித்து வரும் நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவரின் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X