'ஆங்ரி யங் மேன்' அஜீத்தை 'கூல் மேன்' ஆக்கிய ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்
சென்னை: அஜீத் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் ஷாலினி. ரசிகர்களை திரை அரங்குகளுக்கு அழைத்து வர ஒரு குட்டி நடிகை இருந்தார். அவர் தான் ஷாலினி என்று பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒருமுறை அவரைப் பற்றி பெருமையாகத் தெரிவித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் ஹீரோயின் ஆனார்.

காதலுக்கு மரியாதை
இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை ஹிட்டானது. அந்த ஜோடியின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.

அஜீத்
ஷாலினி அஜீத் குமாருடன் சேர்ந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அஜீத் தனது காதலை தெரிவிக்க ஷாலினி அதை ஏற்றுக் கொண்டார்.

திருமணம், குழந்தை
2000ம் ஆண்டு அஜீத்துக்கும், ஷாலினிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். 2008ம் ஆண்டில் அவர் அனௌஷ்கா என்ற மகளை பெற்றெடுத்தார்.

பேட்மிண்டன்
சினிமாவில் இருந்து வெளியேறிய ஷாலினி பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இரட்டையர் பிரிவில் அவருடன் மிர்ச்சி சிவாவின் மனைவி விளையாடி வருகிறார்.

மாறுதல்
அஜீத் ஒரு காலத்தில் கோபப்பட்டால் பொரிந்து தள்ளிவிடுவார். பேட்டி கொடுத்தால் அவ்வளவு தான். அப்படி இருந்த அஜீத் குமார் இன்று சாந்தமாக மாறியதற்கு ஷாலினி காரணம் என்றால் அது மிகையாகாது.

பிறந்தநாள்
ஷாலினி இன்று தனது 35வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுகிறார். அவருக்கு அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











