ரம்யா பாண்டியனுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்து செய்தி!

சென்னை : பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார்.

சேலையில் இடை அழகை காட்டி இளசுகளை கலங்க வைத்து வந்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு வளரும் கதாநாயகியாக இருந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

போட்டோசூட்டின் மூலம்

போட்டோசூட்டின் மூலம்

லாக் டவுனில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைத்து வரும் நிலையில், கடர்ந்த சில மாதங்களுக்கு முன்பே ஒரே ஒரு போட்டோ சூட்டின் மூலம் மிகப்பெரிய வைரலாகி தற்பொழுது அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அருண்பாண்டியனின் உறவுக்காரப்பெண்

அருண்பாண்டியனின் உறவுக்காரப்பெண்

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ரம்யா பாண்டியன், தமிழில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவுக்காரப் பெண் ஆவார்.

சென்றடையவில்லை

சென்றடையவில்லை

தமிழ் சினிமாவிற்கு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், பின் ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிலைப்படுத்திக் கொண்டார் எனினும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் மக்களிடம் அந்த அளவுக்கு பிரபலமாக சென்றடையவில்லை.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

சில மாதங்களுக்கு முன்பு மொட்டை மாடியில் தனது இடுப்பழகை காட்டியவாறு ரம்யா பாண்டியன் வெளியிட்ட சில படங்கள் மிகப்பெரிய வைரலானதை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உயர்ந்த நிலையில், தமிழில் மிக பிரபலமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்பாளராக களமிறங்கி பல கோடி ரசிகர்களின் மனதை வென்று தற்பொழுது அதிக ரசிகர்களை கொண்ட வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் மிகப் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

ஒப்பந்தமாகி இருக்கிறார்

ஒப்பந்தமாகி இருக்கிறார்

இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமும் ஒரு சில படங்களின் மூலமும் மிகப் பிரபலமான ரம்யா பாண்டியனை பலரும் திரைப்படங்களில் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் தற்பொழுது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகவும், அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழையைப் பொழிந்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X