ஸ்லிம் அழகி சிம்ரனுக்கு பிறந்தநாள்.. தமிழ் சினிமாவை ரூல் செய்தவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். அவர் பீக்கில் இருந்தபோது நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். பப்ளியாக இருந்தால்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை கொண்டாடுவார்கள் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கி ஸ்லிம்மாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவரலாம் என்ற புது விஷயத்தை கோலிவுட்டுக்கு சொல்லிகொடுத்தவர் சிம்ரன். இன்று அவர் தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் சிம்ரன். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்தப் படம்தான் நியூசிலாந்தில் முதன்முறையாக ஷூட் செய்யப்பட்ட இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்ற சூழலில் சூப்பர் ஹிட் முக்காபுல்லா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனின் கண்களில் சிம்ரன் பட அவரது வாழ்க்கை மாறியது.

Today Simran Birthday Here are the details about her Net Worth

குவிந்த வாய்ப்புகள்: அதன்படி 1996ஆம் ஆண்டு அமிதாப்பின் கம்பெனி தயாரித்த தெரெ மெரே சாப்னே படத்தில் ஹீரோயினாக மாறினார் சிம்ரன். அவருக்கு மிகச்சிறந்த பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்னல் ஒரு கோடி பாடலில் சிம்ரனின் நடனத்தையும், அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.

ரூல் செய்த சிம்ரன்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் கமிட்டான படங்கள் அனைத்துமே ஒன்று மெகா ஹிட் இல்லை சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. இதனால் ஒரு நாயகியின் சகாப்தம் தமிழ் சினிமாவில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.

எந்த கேரக்டராக இருந்தாலும் தூள்தான்; சிம்ரனை பொறுத்தவரை அவரது பலமே அவரது அழகும், திறமையும். அவரிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பவர். ஒருபக்கம் வாலியில் கிளாமர் ரோலும் செய்தார், மறுபக்கம் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கண் தெரியாத ருக்குவாக ரசிகர்களை கண் கலங்கவும் செய்தார். அதனாலேயே அவரது கொடி தமிழ் சினிமாவில் உச்சம் பறந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்படி ஒரு ஹீரோயின் கிடைப்பது அபூர்வம் என்றே கோலிவுட் கருதியது.

நடன கில்லி: முக்கியமாக சிம்ரனின் நடனத்தை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, விஜய் போன்ற மிகச்சிறந்த நடனம் ஆடுபவர்களுடன் நடனம் ஆட மற்ற நடிகைகள் திணறி கொண்டிருந்த சமயத்தில் சிம்ரனோ அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டு சென்றார். விஜய்கூட தனக்கு டஃப் கொடுத்து ஆடும் ஒரே நடிகை என்றால் சிம்ரன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்த சிம்ரன் தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பிறந்தநாள்: திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த சிம்ரன் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நடித்துவரும் அவர் கடைசியாக கேப்டன் படத்தில் நடித்திருந்தார். அவர் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி அவருக்கு மொத்தம் 60லிருந்து 80 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மும்பை மற்றும் சென்னையில் பிரமாண்ட சொகுசு பங்களாவும், கோயம்புத்தூரில் ஒரு பண்ணை வீடும் இருக்கிறதாம். அதேபோல் கோடி ரூபாய் அளவு மதிப்புடைய வைர நெக்லெஸ்களும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பிஎம்டபிள்யூ X5, ஆடி Q7 உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X