இந்த 6 மாசத்துல.. ரொம்ப நல்லா நடிச்ச டாப் 5 நடிகைகள் இவங்க தான்.. யாரு யாருன்னு பார்க்க ஓடியாங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இதில், 3 கோடி பட்ஜெட் முதல் 300 கோடி பட்ஜெட் வரை பல படங்கள் வெளியாகி உள்ளன. ஹீரோக்களுக்கு இணையாக பல டாப் நடிகைகள் முதல் புதுமுக நடிகைகள் வரை இந்த ஆண்டு தங்களின் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கமறுக்கின்றனர் என்கிற சர்ச்சையை சிலர் கிளப்பினாலும், மார்க்கெட்டை வைத்து தான் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது தான் யதார்த்தம்.

வெறும் ஹீரோ மட்டுமே நடித்தாலும், ரசிகர்களுக்கு போரடித்துவிடும். ஹீரோயின்கள் சென்ட்ரிக் படங்களையும் ரசிகர்கள் பெரிதும் ரசிப்பதில்லை. இருவரும் இணைந்து சரிசம விகிதத்தில் ரசிகர்களை என்டர்டெயின் செய்வதை தான் அதிகப்படியான மக்கள் விரும்புகின்றனர். அப்படி இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய டாப் 5 நடிகைகள் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

Top 5 Best Actress in Tamil Cinema this 2025 list is here
Photo Credit:

5. சான்வி மேக்னா - குடும்பஸ்தன்: ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிக்ர்களையும் இப்படியொரு மனைவி கிடைக்கமாட்டாரா என ஏங்க வைத்தவர் தான் நடிகை சான்வி மேக்னா. அதிலும், வெறும் நைட்டி அணிந்துக் கொண்டு கணவரை காலால் முகத்தை தடவும் காட்சிகளில் எல்லாம் கெமிஸ்ட்ரியில் கலங்கடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் இவரை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Top 5 Best Actress in Tamil Cinema this 2025 list is here
Photo Credit:

4. துஷாரா விஜயன் - வீர தீர சூரன்: அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தில் தனக்கே உரித்தான பாணியில் ரவுண்டு கட்டி நடித்து மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை வெளிப்படுத்தியிருப்பார் துஷாரா விஜயன். ராயன், வேட்டையன் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

Top 5 Best Actress in Tamil Cinema this 2025 list is here
Photo Credit:

3. சுவாசிகா - மாமன்: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அக்காவாக நடித்து படத்தை பாக்ஸ் ஆபீஸில் பக்காவாக தூக்கி நிறுத்தியதே நடிகை சுவாசிகாவின் நடிப்பு தான். தம்பி இறந்துவிட்டான் என மகனை காப்பாற்ற சொல்லி, அவன் போட்டோவுக்கு மாலை போட்ட காட்சிகளை எல்லாம் பார்த்து என்னடா இவங்க இப்படி நடிக்கிறாங்களே என மிரண்டு போய் கிராமங்களில் படத்தை பார்த்து ஹிட்டாக்கி விட்டனர்.

Top 5 Best Actress in Tamil Cinema this 2025 list is here
Photo Credit:

2. பூஜா ஹெக்டே - ரெட்ரோ: கவர்ச்சி உடைகளில் தொடையழகை காட்டித்தான் புட்ட பொம்மாவாகவும், ஹலமிதி ஹபிபோவாகவும் அழகு பதுமையாக பூஜா ஹெக்டே வலம் வருகிறார் என்கிற மாயையை எல்லாம் ஒட்டுமொத்தமாக ரெட்ரோ படத்தில் டார்க் மேக்கப் போட்டு ஹோம்லி உடைகளை மட்டுமே அணிந்து அந்த காலத்து ஸ்ரீதேவியை பார்த்தது போல அளவான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார் பூஜா ஹெக்டே.

Top 5 Best Actress in Tamil Cinema this 2025 list is here
Photo Credit:

சிம்ரன் / த்ரிஷா: முதலிடத்தில் நடிகைகள் சிம்ரன் மற்றும் த்ரிஷா உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இருவரும் இந்த ஆண்டும் பிசியான நடிகையாகவும் வெற்றிப் பட நாயகிகளாகவும் வலம் வருகின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சேலையை கட்டிக் கொண்டு "ஆள் தோட்ட பூபதி" பாடலுக்கு ஆடியும் இலங்கை தமிழ் பேசக் கூடாது என யோகி பாபு கண்டிஷன் போட்டும், அதையும் மீறி அவர் பேசும் இடங்களும், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழகும் விதமும் என தியேட்டர்களில் மக்களை நிரப்ப சசிகுமாருடன் இணைந்து அவர் நடித்த விதம் அற்புதம். விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் என தனக்கு கொடுக்கப்பட்ட ரோல்கள் எப்படி இருந்தாலும், அதில், தனது 100 சதவீதத்தை கொடுத்து தொடர்ந்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் த்ரிஷா மாஸ் தான். சூர்யாவின் கருப்பு படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X