Year Ender: 2025ல் அடித்து ஆடிய பவர்ஃபுல் ஹீரோஸ்? மாஸ் முதல் மண் வாசனை வரை.. சிறந்த நடிகர்கள் யார்?

சென்னை: 2025ம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம், நாளை 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல்கள் என இந்த ஆண்டு நடந்த அனைத்திலும் சிறந்தது இதுதான், இவர்கள்தான் என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாகும். இந்த பட்டியலுக்காக ரசிகர்கள் பலரும் காத்திருப்பதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் 2025ன் சிறந்த நடிகர்கள் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்- கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரூ400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ600 கோடியை வசூலை அள்ளியது. இந்த படத்தில் குமார் என்ற ரோலில் ரஜினி நடித்திருந்தார். 2.0 மற்றும் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு பிறகு, கூலி திரைப்படம் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

Year Ender 2025 2025 Best actor 2025
Photo Credit:

ரிஷப் ஷெட்டி- காந்தாரா 1: இந்த ஆண்டில் அதிக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகராக ரிஷப்ஷெட்டி இருக்கிறார். காந்தாரா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து. இந்த ஆண்டு 'காந்தாரா சாப்டர் 1' படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் அவரது தோற்றம், உடல் மொழி, பார்வை என அனைத்தும் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரிஷப் ஷெட்டி தனது நடிப்பால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்.

அஜித் குமார் - குட் பேட் அக்லி : மாஸ் ஹீரோ என்ற வட்டத்தைத் தாண்டி, பல்வேறு முகங்களை ஒரே படத்தில் அஜித் வெளிப்படுத்தினார். குட் பேட் அக்லி படத்தில் அவரது மாறுபட்ட நடிப்பும், ஸ்டைலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அமைதியும், அதிரடியும் கலந்த அவரது நடிப்பு, இந்த ஆண்டின் முக்கியமான பேசுபொருளாக மாறியது.

Year Ender 2025 2025 Best actor 2025
Photo Credit:

தனுஷ் - குபேரா : தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு குபேரா, தேரே இஷ்க் மெய்ன்,இட்லி கடை என மூன்று திரைப்படங்கள் வெளியானது. குபேரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது, இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவுடன் தனுஷ் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், தெலுங்கில் குபேரா நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, இட்லி கடை படத்தை இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். இந்த மாத கடைசியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் Tere Ishq Mein இந்திப் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

சூர்யா - ரெட்ரோ: வித்தியாசமான கதைத்தேர்வு, ஆழமான நடிப்பு... சூர்யா என்றாலே தரம் என்று நிரூபிக்கும் வகையில் ரெட்ரோ படம் அமைந்தது. ஒரு காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் அவரது நடிப்பு, ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின் வெளியான இந்த படம் ஓரளவிற்கு நன்றாக தியேட்டரில் ஓடியது.

Year Ender 2025 2025 Best actor 2025
Photo Credit:

சிவகார்த்திகேயன் - மதராஸி: மாஸ் ஹீரோ அவதாரம், சமூக பொறுப்பு கொண்ட கதைக்களம் தான் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தன்னை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஆக்ஷன், எமோஷன், மெசேஜ் என அனைத்தையும் சமநிலையில் வைத்த நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டு பெற்றது.

மணிகண்டன் - குடும்பஸ்தன்: லவ்வர், குட்நைட் என தனக்கு தகுந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் மணிகண்டன். அவரின் எளிமையான நடிப்பை குடும்பஸ்தன் படத்தில் மீண்டும் நிரூபித்தவர் மணிகண்டன். குடும்பஸ்தன் படத்தில் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை உணர்ச்சிபூர்வமாக எடுத்துச் சென்ற அவரது நடிப்பு, குடும்ப ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.

துருவ் விக்ரம் - பைசன்: தன் நடிப்புத் திறனை ஒவ்வொரு படத்திலும் மேம்படுத்திக் காட்டி வரும் துருவ் விக்ரம், பைசன் படத்தின் மூலம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தினார். கதாபாத்திரத்தின் மனநிலை, உடல் மொழி, உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றில் காட்டிய தீவிரம், அவரை ஒரு வித்தியாசமான நடிகராக நிலைநிறுத்தியது. பைசன் மூலம் துருவ் விக்ரம் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

அருண் விஜய் - வணங்கான்: அழுத்தமான கதாபாத்திரம், தீவிரமான உடல் மொழி. வணங்கான் படத்தில் அருண் விஜய் காட்டிய நடிப்பு அவரது கேரியரில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவரது அர்ப்பணிப்பு தெளிவாக தெரிந்தது. மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறனை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற ஆண்டு என்றே கூறலாம்.

More from Filmibeat

Read more about: year ender 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X