பல கோடிக்கு சொந்தக்காரி.. கவிழ்ந்து கிடக்கும் இந்த குட்டிப்பாப்பா யாருனு தெரியுதா?
சென்னை: தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் இந்த போட்டோவில் கவிழ்ந்து கிடக்கும் குட்டி பாப்பா. பல கோடிக்கு சொந்தக்காரியான இந்த நடிகையின் புகைப்படம் அவரது ரசிகர்களால் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை அசின். அந்த விளம்பரத்திற்கு பிறகு மலையாளம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றதை அடுத்து தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் ஒரு படத்திலும், நாகார்ஜுனாவுடன் ஒரு படத்திலும் நடித்தார்.

நடிகை அசின்: இவர் நடித்த இரண்டு தெலுங்கு படமும், சூப்பர் ஹிட்டாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனமும் அசின் மீது விழுந்தது. இதனையடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம்.கும்ரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் மலையாள பெண் குட்டியாக அறிமுகமானார். மலையாளம் கலந்த தமிழோடு பேசும் கதாபாத்திரத்தில் தோன்றிய அசின் இயல்பான நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் கோலிவுட்டின் கனவு கன்னியாக மாறினார்.
டப் நடிகர்களுடன்: இதைத்தொடர்ந்து, விஜய்யுடன் நடித்த சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதனையடுத்து சூர்யாவுடன் நடித்த கஜினி படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. தொடர்ந்து சூர்யாவுடன் வேல், அஜித்துடன் ஆழ்வார், வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கஜினி படம் கொடுத்த வெற்றி அவரை பாலிவுட்டுக்கும் அழைத்து சென்றது. அங்கு சென்றும் தனது திறமையை காட்டிய அவர் சல்மான் கான், அஜய் தேவகான், அக்ஷய் குமார் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

கோடீஸ்வரி: தமிழில் இவர் கடைசியாய விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியான அசின், தனது கணவரின் தொழிலை தற்போது கவனித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறான்.
யார் இந்த குட்டிபாப்பா: திருமணத்திற்கு பிறகு கணவர்,குழந்தை,பிஸ்னஸ் என பக்கா குடும்பத்தலைவியாக மாறிய அசின், இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்து இருந்தாலும், தனது புகைப்படங்களை பதிவிட்டது கிடையாது, அதே போல குடும்ப புகைப்படங்களையும் வெளியிட மாட்டார். ஆனால் ஒவ்வொரு வருடமும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார். நடிகை அசின் தனது ரசிகர்களை மறந்துவிட்டாலும், இவர் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் அசினின் குழந்தை பருவ போட்டோவை ஷேர் செய்துள்ளனர். அந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











