2012... ஒரு படம் கூட பண்ணாத டாப் ஹீரோயின்கள்!
முன்னணி ஹீரோயின்களாக பரபரப்பாக பேசப்படும் சில நடிகைகளின் படம் ஒன்று கூட இந்த ஆண்டு 2012-ல் வெளியாகவில்லை.
ஆனாலும் இவர்களின் சம்பளமோ, மவுசோ குறைந்த மாதிரியும் தெரியவில்லை. இன்றைக்கும் கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளனர்.
இவர்களின் முக்கியமானவர்கள் தமன்னா, த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஸ்ரேயா ஆகிய நால்வரும்தான்.

தமன்னா
தமிழிலிருந்து சுத்தமாக ஒதுங்கிவிட்டார் இந்த ஆண்டு. எந்தப் புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
2013-ம் ஆண்டு தமிழ் சினிமா என்வசம் என்று கூறிவருகிறார். காரணம், அஜீத்துடன் அடுத்த படத்தில் நடிப்பதுதான். இந்தப் படத்தில் தமன்னா சம்பளம் ரூ 1.5 கோடியாம்.

நயன்தாரா
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொல்லப்பட்டாலும், இவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். அதற்குப் பிறகு இவர் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படம் டப் செய்யப்பட்டு வந்தது. ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும், அணில் கடித்த பழத்துக்கு இருக்கும் மவுசு மாதிரி, நயனுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது டிமாண்டும் சம்பளமும்.
2013-ல் அதிக படங்கள்
இப்போது தமிழில் 3 படங்கள் நடிக்கிறார் நயன்தாரா. அஜீத், ஆர்யா, உதயநிதியின் நாயகி இவர்தான். அடுத்த 2013ல் அதிக தமிழ்ப் படங்களில் நடித்தவர் என்ற பெயர் இவருக்குதான் போலிருக்கிறது.

த்ரிஷா
வயது ஏற ஏற செம க்ளாமராகிக் கொண்டே போகும் த்ரிஷாவுக்கும் இந்த ஆண்டு எந்தப் படமும் வெளியாகவில்லை. சமர் வெளியாகிவிடும் என்று ரொம்ப நம்பினார். ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் படம் இரு வாரங்கள் தள்ளிப் போனதால், 2013 ரிலீசாகிவிட்டது அந்தப் படம். இவருக்கும் அடுத்த ஆண்டு 3 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன, சமருடன் சேர்த்து.

ஸ்ரேயா
இந்த ஆண்டு முழுக்க ஸ்ரேயா ஒரே படத்தில்தான் நடித்துக் கொண்டிருந்தார். அது தமிழ் / கன்னடத்தில் உருவாகும் சந்திரா. மீதி நேரங்களில் மேக்ஸிம் போன்ற பத்திரிகைகளுக்கு இருக்கிற கவர்ச்சியை எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். சிவாஜியை 3 டியில் பார்த்த பிறகு ஸ்ரேயாவைத் தேடி நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











