»   »  மச்சி என் கனவுல அடிக்கடி ஹன்சிகா வர்றாடா!

மச்சி என் கனவுல அடிக்கடி ஹன்சிகா வர்றாடா!

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

கல்லூரி ஹாஸ்டல் விடுதியோ, மேன்சனோ ஆண்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிரத்யோக அறைக்குள் நுழைந்தாலே அங்கே சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகைகளின் படங்கள்தான் நமக்கு முதலில் தரிசனம் கிடைக்கும்.

நடிகையைப் போல அழகான மனைவி நமக்கு கிடைக்க மாட்டாளா என்று ஏக்கத்துடனேயே உறங்கி, விழிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

90 களில் கனவுக்கன்னிகளாக இருந்த குஷ்பு, ரோஜா, கவுதமி போன்ற நடிகைகள் பலரும் இன்றைக்கு ஆன்டிகளாகிவிட்டதால் இன்றைய டிரெண்டுக்கு இளசுகளின் அறையை அலங்கரிக்கும் நடிகைகள் யார்? யார்? என்று மேன்சன் அறையை ஆராய்ந்ததில் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட் நடிகைகள் பலரும் சுவர்களை அலங்கரித்திருந்தனர்.

ஸ்ரூதிஹாசன்

ஸ்ரூதிஹாசன்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலந்து கட்டி அடிக்கும் ஸ்ருதிஹாசன்தான் இன்றைய இளசுகளின் கனவுகளில் அதிகம் வலம் வருகிறார் போலிருக்கிறது. டிடே போஸ்டர்களும், கவர்ச்சிகரமான ஸ்டில்ஸ்களும்தான் ஒட்டப்பட்டிருக்கிறதாம்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

தமிழில் அதிகம் படங்களை கைவசம் வைத்திருக்கும் ஹன்சிகா பெரும்பாலான இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கிறாராம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தமிழில் முதலில் நடித்த படங்கள் ஹிட் அடிக்காவிட்டாலும், நான் மகான் அல்ல, துப்பாக்கி, போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமன்னா

தமன்னா

சோகமான முகத்துடனே காட்சியளிக்கும் தமன்னா, சிறுத்தை, பையா என கார்த்தியுடன் ஜோடி போட்டு ஹிட் கொடுத்தார். அதற்குபின்னர் சரியான படங்கள் அமையாவிட்டாலும் அவரது கவர்ச்சி போஸ்டர்கள் ஊடகங்களில் வெளியாகி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கிறதாம்.

அனுஷ்கா

அனுஷ்கா

முப்பது வயதை நெருங்கும் அனுஷ்காவின் கவர்ச்சி கொஞ்சமும் குறைந்த பாடில்லை. சிங்கம் 2 படத்திலும் கூட கூடுதலாகத்தான் நடித்திருப்பார். அனுஷ்காவின் உயரமும், சரியான உடலமைப்பும் தங்களை கவர்வதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

நயன்தாரா

நயன்தாரா

ஐயாவில் தொடங்கிய பயணம் அஜீத்தின் 53 வது படம் வரை தொடர்கிறது. முப்பதை நெருங்கினாலும் பஞ்சமில்லாத கவர்ச்சியால் ரூ.2 கோடி சம்பளம் வரை பேசுகின்றனர். இன்றைக்கும் நயன்தாரா போஸ்டரை ஒட்டி இரவில் கனவில் ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

திரிஷா

திரிஷா

90 களின் இறுதியில் அறிமுகமான நடிகைதான் திரிஷா. ஆனாலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக கதாநாயாகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கடைசியாக நடித்த சமர் சரியாகப் போகாவிட்டாலும் தனியான கவர்ச்சியால் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.

இலியானா

இலியானா

தமிழ் நடிகைகள் தவிர பாலிவுட், டோலிவுட் நடிகைகள் பலரும் தமிழ் ரசிகர்களின் கனவுகளில் வருகிறார்களாம். இதில் நண்பன் நாயகி இலியானவை அதிக அளவில் ரசிக்கின்றனராம்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

ஓம் சாந்தி ஓம் என்று ஆரம்பித்து சென்னை எக்ஸ்பிரஸ் வரை படு ஸ்பீடாக போகிறது தீபிகா படுகோனே பயணம். என்னா பொண்ணுடா மச்சான் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனராம்.

சோனாக்ஷி சின்கா

சோனாக்ஷி சின்கா

பிரபுதேவாவிற்கு பிடித்த நாயகி சோனாக்ஷி சின்கா. ரவுடி ரத்தோர் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பெற்றுவிட்டார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கவர்ச்சியான நடிப்பால் கலங்கடிப்பவர் கரீனா கபூர். ஆனால் சாயிப் அலிகானை மணந்த பின்னர் ஆத்திரத்தில் போஸ்டரை கிழித்தவர்களும் இருக்கின்றனராம்.

சன்னி லியோன், ஷெர்லின் சோப்ரா

சன்னி லியோன், ஷெர்லின் சோப்ரா

சில ரசிகர்கள் ரகசியமாக சன்னி லியோன் படங்களையும் ஷெர்லின் சோப்ராவின் படங்களையும் கூட ஒட்டி வைத்து ரகசியமாய் ரசித்து வருகின்றனராம்.

கனவுல ஹன்சிகா

கனவுல ஹன்சிகா

நேத்து என் கனவுல ஹன்சிகா வந்தா மாப்ளே! என்று ரூம் மேட்டிடம் சொல்லி அதற்கு அவர், உன் கனவுலயாவது ஹன்சிகா தனியாத்தான் வந்தா, ஆனா நான் ஹன்சிகாவை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி எனக்கு கனவு வந்தது என்று பதிலுக்கு பல்பு வாங்கினால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Kollywood and Bollywood areconsidered to be one of the biggest film industries in all over the world today. There are many actresses who are known for their exquisite hotness and in this article we are going to discuss about the actresses who have made their career based on their hotness quotient.Here is the list of top hottest looking K town and B town actresses.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more