»   »  'சைஸ் ஜீரோ'வுக்கெல்லாம் சான்ஸே இல்லை.. ஸ்ரீதேவி

'சைஸ் ஜீரோ'வுக்கெல்லாம் சான்ஸே இல்லை.. ஸ்ரீதேவி

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: கேட் வாக் போவதற்கு, பேஷனுக்கு சைஸ் ஜீரோ சாத்தியம். ஆனால் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, கணவர், குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்து அது சாத்தியமே இல்லை என்று கூறியுள்ளார் இன்னும் அப்படியே ஒயிலாக இருக்கும் மயிலு ஸ்ரீதேவி.

இன்னும் சில மாதங்களில் 50 வயதைத் தொடப் போகிறார் ஸ்ரீதேவி. ஆனாலும் இளம் தலைமுறை நடிகைகளுக்கு ஸ்ரீதேவி ஒரு ஆச்சரியமாகவே திகழ்கிறார். காரணம், அவரது அழகும், இளமையும் கிட்டத்தட்ட அப்படியே இருப்பதுதான்.

16 வயதினில் பார்த்த அழகுடன் இல்லாவிட்டாலும் கூட ஸ்ரீதேவி என்ற டிரேட் மார்க் முத்திரை இன்னும் அவரை விட்டுப் போகவில்லை.

இந்த நிலையில் தற்போது பேஷனாக பேசப்பட்டு வரும் சைஸ் ஜீரோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

சைஸ் பார்த்தா முடியாதே

சைஸ் பார்த்தா முடியாதே

நிஜ வாழ்க்கையில் ஜைஸ் ஜீரோவை கடைப்பிடிப்பது என்பது ரொம்பக் கஷ்டம்.

சில இடங்களுக்குத்தான் லாயக்கு

சில இடங்களுக்குத்தான் லாயக்கு

சில தொழில்களுக்குத்தான் அது பொருத்தமாக இருக்கும். எல்லோருக்கும், எல்லா இடத்திலும் அது பொருந்தாது.

கேட் வாக் போக ஓ.கே.

கேட் வாக் போக ஓ.கே.

பேஷன், கேட் வாக் போன்றவற்றுக்கு சைஸ் ஜீரோ ஓ.கே. ஆனால் நிஜ வாழ்க்கையில், இல்லத்தரசிகளுக்கு இது சற்றும் பொருந்தாது.

யாராச்சும் இருந்தா வாழ்த்துகிறேன்

யாராச்சும் இருந்தா வாழ்த்துகிறேன்

ஒருவேளை எல்லா பொறுப்புகளையும் பார்த்து்க் கொண்டு சைஸ் ஜீரோவையும் பராமரிக்கும் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார் ஸ்ரீதேவி.

முதல் சைஸ் கரீனாதான்

முதல் சைஸ் கரீனாதான்

பாலிவுட்டில் சைஸ் ஜீரோவுக்கு மாறி புரட்சி படைத்தவர் கரீனா கபூர்தான். ஆனால் இப்போது அவரே அதை விட்டு விட்டு குண்டடித்து விட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    She will turn 50 in a few months, but actress Sridevi can still give several younger Bollywood beauties a run for their money with her glowing looks and svelte figure. However, she says it is difficult to maintain a size zero figure in real life. Sridevi, who made her comeback last year with Gauri Shinde's debut directorial venture 'English Vinglish', believes zero figure is good only for certain professions.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more