எங்களுக்கெல்லாம் எப்போ அடையாளம் கிடைக்கும்.. ஒரு கவர்ச்சி டிவி நடிகையின் புலம்பல்!
மும்பை: டிவி நடிகைகளுக்கு சினிமாவில் அடையாளம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது என்று புலம்பியுள்ளார் ஒரு டிவி நடிகை.
மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை கரீஷ்மா தன்னா. இவர் டிவி சீரியல்களில் பிசியானவர். அத்தோடு கவர்ச்சியிலும் பிரமாதமாக பேசப்படுபவர்.
டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கதிகலங்க வைத்த தில் நடிகையும் கூட. இப்போது விவேக் ஓபராயுடன், கிராண்ட் மஸ்தி படத்தில் 2வது ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

எங்களுக்கெல்லாம் முத்திரை கிடையாதா...
டிவி நடிகைகளின் நிலை குறித்து அவர் கூறுகையில், டிவி நடிகைகளுக்கு சினிமாவில் அங்கீகாரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. எங்களுக்கும் முத்திரை, அடையாளம் தேவை என்பது சினிமாவில் யாரும் உணருவது இல்லை.

பாரபட்சம் ஏன்...
எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள் போலவே பார்க்கிறார்கள். பாரபட்சமாகவே நடத்துகிறார்கள். இது எங்களை கஷ்டப்படுத்துகிறது.

ரொம்பப் போராட வேண்டியிருக்கு
சினிமாவில் எங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்க நாங்கள் ரொம்பவே போராட வேண்டியுள்ளது. டிவி நடிகை என்ற முத்திரையிலிருந்து வெளியேற கஷ்டப்பட வேண்டியுள்ளது.

காலம் மாறிப் போச்சுங்க
முன்பு போல இப்போது இல்லை. டிவியில்தான் நல்ல நடிகைகள், நடிகர்கள் கிடைக்கிறார்கள். நிறைய டிவி நடிகர்களுக்கு இன்று சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது மகிழ்ச்சி தருகிறது என்றார் அவர்.

முழுக் கவர்ச்சியில்
கிராண்ட் மஸ்தி படத்தில் கரீஷ்மாவுக்கு முழு நீளக் கவர்ச்சி வேடமாம். கூடவே காமெடியும் இருக்கிறதாம். இரண்டிலும் கலக்கப் போகிறேன் பாருங்கள் என்று மார் தட்டிக் கூறுகிறார் கரீஷ்மா... நீங்க சொன்னா கரெக்ட்தான்மா


Click it and Unblock the Notifications











