அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லைனா வாய்ப்பு இல்லையா?.. டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை ஓபன் டாக்

சென்னை: சசிகுமார், சிம்ரன் உள்ளிடோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 24 வயதே ஆன அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் யோகலட்சுமியும் நடித்திருந்தார். அவரது கேரக்டரும் படத்தில் பெரிதாகவே பேசப்பட்டது. அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இவருக்கு தமிழில் வளமான எதிர்காலம் இருக்கிறது என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களி திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.எப்போது தீரும் என்பதும் நீண்ட கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.

வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்தும், சினிமாவில் அந்த மாதிரியான விஷயங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Tourist Family Actress Yogalakshmi Talks about Adjustment Issue on Cinema Industry
Photo Credit:

டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை: இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்த நடிகை யோகலட்சுமி இதுகுறித்து பேசுகையில், "சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நடந்துகொள்வது, நாம் எதிர்கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் இத்துறையில் ரொம்பவே முக்கியம் என்று நினைக்கிறேன். சிலர் வந்து அப்படி தவறாக கேட்டாலும் நீங்கள் எப்பட் இருக்கிறீர்களோ அப்படியேத்தான் இருக்க வேண்டும்.

ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்: உங்களுக்கு அது வேண்டுமென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டாம் என்று உறுதியோடு முடிவெடுத்துவிட்டால் அந்த உறுதியான முடிவில்தான் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றால் வாய்ப்பு கிடைக்காது என்றால்; அந்த வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட உரிமை. நாம் இருப்பதை பொறுத்துதான் அனைத்தும் இருக்கின்றன. வேண்டாம் என்றால் வேண்டாம்தான். அதில் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.

யார் இந்த யோகலட்சுமி: யோகலட்சுமி டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு முன்னதாக ஹார்ட் பீட், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் எல்லாம் அவருக்கு கிடைக்காத திருப்புமுனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தால் அவருக்கு கோலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவருவதாக கூறப்படுகிறது. அதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 75 கோடி ரூபாய்வரை வசூலில் அள்ளியது. முக்கியமாக நீண்ட காலம் கழித்து தமிழில் ஒரு ஃபீல் குட் திரைப்படமாகவும் அமைந்திருதது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X