பூஜா ஹெக்டேவுடன் டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ் ஜெகன்.. மகனை தொடர்ந்து அப்பா விஜய் படத்திலும் நடிக்கிறாரா?
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது டூரிஸ்ட் ஃபேமிலி தான். 8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 90 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தில் ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்து படத்தின் வெற்றிக்குப் பக்காவாக உழைத்ததே நம்ம கமலேஷ் ஜெகன் தான்.
நடிகை பூஜா ஹெக்டேவுடன் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து, உங்களோடு வேலை பார்த்த அனுபவம் ரொம்பவே சூப்பரா இருந்துச்சு மேம் என பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவுடன் கமலேஷ் ஜெகன் நடித்த நிலையில், ஜன நாயகன் படத்தில் முக்கியமான ரோலில் கமலேஷ் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோக்களை கமலேஷ் ஷேர் செய்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி நடிகர்: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமாகி பிரபலமான கமலேஷ் ஜெகனுக்கு அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இவர் செய்த சேட்டைகளும், அலப்பறைகளும் ரசிகர்களை தியேட்டர்களில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்க படமும் பிளாகபஸ்டர் ஹிட் அடித்தது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப பையன் டாப்புக்கே போய்விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
பூஜா ஹெக்டேவுடன் கமலேஷ்: நடிகை பூஜா ஹெக்டேவுடன் கமலேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உங்களுடன் வேலை பார்த்த அனுபவம் ரொம்பவே நல்லா இருந்துச்சு மேடம், ரொம்ப நன்றி எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு பூஜா ஹெக்டே இந்தியில் தேவ், தமிழில் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கூலி படத்தில் மோனிகா பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அடுத்ததாக விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் தான் கமலேஷ் ஜெகன் நடித்து வருகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்பா, மகன் படங்களில் நடிக்கிறாரா?: ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்திலும் கமலேஷ் நடித்து வருவதாக ஏற்கனவே பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், பூஜா ஹெக்டேவுடன் அவர் நடிப்பதாக அறிவித்த நிலையில், ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருவதால், அந்த படமாக கூட இருக்கலாம் என்கின்றனர். கூடிய சீக்கிரமே அதுதொடர்பான அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க்யூட் பூஜா ஹெக்டே: கமலேஷ் உடன் வித விதமாக போஸ் கொடுத்து செம க்யூட்டாக பூஜா ஹெக்டே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமான கமலேஷுக்கும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருவது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











