Don't Miss!
- News
அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஊர் சுத்தனும் உடற்பயிற்சி நடிப்பு இப்போதைக்கு ப்ரியா பவானி சங்கர் ஷெடியூல்
Recommended Video
சென்னை: ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகை .இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் . மேலும் துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாஃபியா' படத்திலும் நடித்து வருகிறார் ,இதையடுத்து குறுதி ஆட்டம் ,களத்தில் சந்திப்போம் ,கசடதபற,பொம்மை ஆகிய படங்களில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார் .
ப்ரியா பவானி சங்கர் தனது சினிமா வாழ்கையை முதலில் செய்திவாசிப்பாளராக தான் துவங்கினார் .சென்னையை மையமாக வைத்து இயங்கி வரும் ஊடகமான புதியதலைமுறையில் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா ,அதன் பிறகு விஜய் தொலைக்காட்சி தயாரித்த 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற நாடகத்தில் நடித்தார் . அந்த நாடகம் மூலம் பிரபலம் அடைந்தார் ப்ரியா பவானி சங்கர் .

அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்னும் நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார் .அவரின் தொகுத்து வழங்கும் திறமை கண்டு மீண்டும் விஜய் டீவி வாய்ப்பு அளித்து சூப்பர் சிங்கர் மற்றும் கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகியவற்றையும் தொகுத்து வழங்கினார் .
அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான 'மேயாத மான் ' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக கால்பதித்தார் . இந்த படத்தில் இவர் நடித்தது அனைவரையும் கவரந்திருந்தது .மற்றும் ஒரு பெரிய விசயம் இதற்கு முன்பே இவர் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலம் அடைந்து விட்டதால் மக்கள் இவரை எளிதில் ஏற்று கொண்டனர் .இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான் நேரடியாக வெள்ளித்திரைக்கு வந்து பிரபலம் அடைபவர்களை விட சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள் .இது ஷாருக்கான் முதல் சிவகார்த்திகேயன் வரை நாம் பார்த்து வரும் உண்மை தான் .

மேயதா மான் வெற்றிக்கு பிறகு கடைகுட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் படங்களில் நடித்து இருந்தார் ,அந்த படங்களிலுமே மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ப்ரியா பவானி சங்கர் .

நடிப்பதை தவிர்த்து மற்ற நேரங்களில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார் ப்ரியா ,அந்த புகைப்படங்களை சரியாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி விடுவார் ,அதை தவிர்த்து கிடைக்கும் வேளையில் போட்டோசூட்கள் செய்து அதனையும் பதிவேற்றி ரசிகர்களை குசி படுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர் .மேலும் நடிப்புக்கு மிக அவசியமான உடற்பயிற்சியை மிக தவறாமல் செய்து வரும் ப்ரியா உடற்பயிற்சியின் போது எடுக்கபடும் பேட்டோகளையும் பதிவேற்றி விடுவார் .

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர்,தமிழ் சினிமாவின் உட்ச பட்ச நடிகையாக விரைவில் மாறுவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.