»   »  குண்டக்க மண்டக்க வந்த திரிஷா!

குண்டக்க மண்டக்க வந்த திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த அழகு நிலையத் திறப்பு விழாவுக்கு வந்த திரிஷா, படு குட்டியூண்டு டிரஸ்ஸில் வந்து அத்தனை பேரையும் விழி விரியச்செய்து விட்டார்.

தமிழ் சினிமாவில் திரிஷா தென்றலாக அசத்திக் கொண்டிருக்கிறார் என்றால், ஆந்திராவில் அனல் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மாறி மாறிஇரு மொழி ரசிகர்களையும் மயக்கிக் கொண்டிருக்கும் திரிஷாவை திடீரன்ெறு பார்த்து அடையாறு வாசிகள் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டனர்.

வி.எல்.சி.சி. என்ற அந்த அழகு பிளஸ் மருத்துவ நிலையத்தின் கிளையை சமீபத்தில் அடையார் இந்திரா நகரில் தொடங்கினர். திறந்து வைத்தவர்தேவதை திரிஷா, அவருடன் கூட வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தவர் ஐஸ்வர்யா தனுஷ்.

நிகழ்ச்சியில் திரிஷா கலந்து கொண்டதை விட அவர் போட்டிருந்த டிரஸ் தான் அனைவரையும் ரொம்பவே சூடாக்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தஅத்தனை பேரின் கண்களும் திரிஷா மீதுதான் ஊர்ந்தபடி இருந்தன.

கருப்பு ஃபிராக்கில் ஜில்லுனு இருந்தார் திரிஷா. இந்த வகை ஃபிராக்குகள் நியூயார்க் நகர சில்வண்டுகளின் லேட்டஸ்ட் விருப்ப உடையாம்.அதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தி அசத்தி விட்டார் திரிஷா.

சமீபத்தில் அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது (கூடவே ஒரு முக்கியமான நடிகரும் உடன் போயிருந்ததாக கோலிவுட்டில் கிசுகிசு உள்ளது!),நியூயார்க்கில் இந்த ஃபிராக்கை பர்ச்சேஸ் செய்தாராம்.

அதேபோல திரிஷாவிடம் இருந்த இன்னொரு விஷயமும்ம் அனைவரையும் கவர்ந்தது. அவரது இடது தோள்பட்டையில், அழகான மீன் டட்டூ,திரிஷாவை இன்னும் எடுப்பாக்கி எல்லோரையும் எகிற வைத்தது.

திரிஷா, ஐஸ்வர்யா தனுஷ், விஎல்சிசி அழகு நிலைய தலைமை செயல் அதிகாரி வந்தனா லூத்ரா ஆகியோர் இணைந்து குத்துவிளக்கை ஏற்றிகிளையை ஆரம்பித்து வைத்தனர்.

திரிஷா வந்திருப்பதைப் பார்க்க அந்த ஏரியாவைச் சேர்ந்த பலரும் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு அங்கு திரண்டு விட்டனர்.கஷ்டப்பட்டு வந்தது வேஸ்டாகவில்லை. அந்த மாதிரி தான் வந்திருந்தார் திரிஷா.

எல்லோரையும் ஸ்டன் ஆக்கிய திரிஷாவுக்கு, விஎல்சிசி தன் பங்குக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. தலைமுடியை மிருதுவாகவும்,ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள உதவும் புரோட்டீன் தெரப்பியை திரிஷாவுக்கு ப்ரியாக செய்துவிட்டனர்.

திரிஷா, பேசாம தனது பெயரை தில் ஷா என்று மாற்றிக் கொள்ளலாம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil