»   »  சுலா சுலா திரிஷா!

சுலா சுலா திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்தக் கால மன்னர்கள் விரும்பி அடித்தது சோம பானம், சுரா பானம். ஆனால் திரிஷாவுக்கு ரொம்பப் பிடித்தது சுலா பானம்.

திரிஷாவின் அம்மா உமா, திரிஷாவைப் பெற்றபோது கூடவே சர்ச்சையையும் சேர்த்து டெலிவரி செய்து விட்டார் போல. திரிஷாவைப் பற்றிய ஏதாவது ஒரு எடக்கு மடக்கான செய்தி வராத நாளே இல்லை.

கொஞ்ச காலத்திற்கு முன்பு அவரது குளியல் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கொடுத்தது. பின்னர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நண்பர்களோடும், நண்பிகளோடும் குடித்து விட்டு குதியாட்டம் போட்டதாக ஒரு மேட்டர் வெளியாகியது.

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சிக்கு படு கிளாமராக டிரஸ் போட்டு வந்து அந்த இடத்தையே சூடாக்கி விட்டுப் போனார் திரிஷா. இப்படி அடிக்கடி செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கும் திரிஷாவைப் பற்றிய ஒரு உற்சாக செய்தி இது.

அது ஒரு வெள்ளிக்கிழமை. சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல். அந்தி சாய்ந்த அழகான நேரம். ஹோட்டல் பாரில் போடப்பட்டிருந்த சொகுசு இருக்கைகளில் வசதியாக சாய்ந்து கொண்டு, வாகாக உள்ளே சாய்த்துக் கொண்டிருந்தனர் நகரத்து நாகரீக மாந்தர்கள் (அதில் பெண்டிரும் உண்டு).

அப்போது அங்கு வந்த திரிஷாவைப் பார்த்து அத்தனை பேரின் திறந்த வாய்களும் மூட மறுத்து முரண்டு பிடித்தன. கண்களையே நம்ப முடியாமல் திரிஷாவையே வெறித்துப் பார்த்தனர் அத்தனை பேரும். காரணம், திரிஷா போட்டு வந்திருந்த படு கிளாமர் டிரஸ்.

வந்த வேகத்தில் ஒரு இருளான மூலையில் அமர்ந்திருந்த கேங்கை நோக்கிப் போனார் திரிஷா. உற்சாக குரலோடு திரிஷாவை வரவேற்றது அந்த இளசுகளின் கூட்டம். அதில் சில இளவயது ஆண்களும் உண்டு.

சுற்றிலும் உள்ளவர்களின் கண்கள் தன்னை மொய்ப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் படு கலாய்பபாக பார்ட்டியை ஆரம்பித்தார் திரிஷா.

திரிஷாவின் இந்த வருகை, பார்ட்டி குறித்து ஹோட்டல் பேரர் ஒருவரிடம் கேட்டபோது, அவங்க அடிக்கடி இங்கே வருவாங்க. இந்த ஹோட்டல் அவருடைய ரெகுலர் விசிட்டிங் பிளேஸ். இன்று திரிஷாவின் பிரண்டோட பிறந்த நாள். கொண்டாட வந்திருக்காங்க என்று கூறி விட்டு கூல் டிரிங் எடுக்க ஓடினார்.

கொடுத்து விட்டு திரும்பி வந்த அவரிடம் மீண்டும் நோண்டியபோது, திரிஷாவுக்கு ரொம்பப் பிடித்த பானம் சுலா. அது ஒரு ஒயின். மிகவும் விரும்பி குடிப்பார், நிறையக் குடிப்பார்.

பெரிய அளவிலான பார்ட்டியாக இருந்தால், ரொம்பவும் உற்சாகமாக இருந்தால் சாம்பெய்ன் ஆர்டர் செய்வார். அப்புறம் சைடுக்கு சிக்கன் மற்றும் பிரான் என்றால் ரொம்ப இஷ்டம். ஒரு பிடி பிடிப்பார் என்று கூறி விட்டு மறுபடியும் ஓடினார்.

திரிஷாவின் இதுபோன்ற பார்ட்டிகள் சட்டுப்புட்டென்று முடிந்த வரலாறே இல்லையாம். நீண்ட நேரம் நிலைத்திருந்து, நிலை தடுமாற ஆரம்பிக்கும் போதுதான் மூட்டையைக் கட்டிக் கொண்டு காருக்குள் விழுந்து வீட்டுக்குத் திரும்புவார்களாம்.

திரிஷாவின் அப்பா கிருஷ்ணனும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் மேனேஜராக இருக்கிறாராம். ஆனால் அந்த ஹோட்டலுக்கு திரிஷா போகவே மாட்டாராம்.

கலக்குங்க மாமியக்கா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil