திரிஷாவின் பிலிம்பேர்!
பிலிம்பேர் பத்திரிக்கையின் தமிழக பதிப்பின் 2வது இதழை தென்னிந்தி திரைத் தாரகை திரிஷா வெளியிட்டார்.
பிரபல திரைப் பத்திரிக்கையான பிலிம்பேர் தனது தமிழகப் பதிப்பைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் இதழை இளைய தளபதி விஜய் கடந்த மாதம் நடந்த கோலாகல விழாவில் வெளியிட்டார்.இந்த நிலையில் 2வது இதழ் வெளியீட்டு விழா சென்னை அக்கார்ட் இன் ஹோட்டலில் நடந்தது. இந்த இதழின் கவர் ஸ்டோரி திரிஷாவை வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்த இதழை திரிஷா வெளியிட்டார்.
அடுத்த சில மாதங்களுக்கு ஒவ்வொரு இதழையும் முன்னணி ஸ்டார்களைக் கொண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளது பிலிம்பேர்.
2வது இதழ் வெளியீட்டு விழாவில் பிரியாமணி, கரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
புதுப் பொலிவுடன், ஜொலி ஜொலிப்புடன் காட்சி அளித்த திரிஷா நிகழ்ச்சிக்குப் பின்னர் நம்மிடம் பேசுகையில்,
நாட்டின் முன்னணி திரைப் பத்திரிக்கையின் பதிப்பை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.
என்னைப் பற்றி எழுதப்பட்டிருந்த கவர் ஸ்டோரியைப் படித்து விட்டு நான் திரில்லாகி விட்டேன். இன்னும் ஊக்கத்துடன் திரையுலகில் வலம் வர இது பூஸ்ட் கொடுப்பது போல உள்ளது.
நம்பர் ஒன், நம்பர் டூ என்ற நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ரசிகர்களும், மீடியாக்களும் என்னை நம்பர் ஒன் ஹீரோயினாக கூறி வருவதை நான் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இது என்னை நெகிழ வைத்துள்ளது. உண்மையில் இதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான விருதாகும் என்றார் சந்தோஷமாக.
பத்திரிக்கையின் ஆசிரியர் ரித்தேஷ் பிள்ளை, மார்க்கெட்டிங் மேலாளர் ஹரிஜித் சப்பா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிலிம்பேர் பத்திரிக்கையின் தென் பிராந்திய ஆசிரியர் தங்கதுரை, மீடியா மேலாளர் நிகில் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











