»   »  நமிதா Vs

நமிதா Vs

Subscribe to Oneindia Tamil

ஹீரோக்களுக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நமீதா, திரிஷா ஆகியோருக்குசரமாரியாக ரசிகர் மன்றங்கள் முளைத்தவண்ணம் உள்ளன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதும், கொடி பிடிப்பதும் அதிகம்.இப்போது இன்னொரு புரட்சியிலும் தமிழக ரசிகப் பெருமக்கள் இறங்கியுள்ளனர்.

இத்தனை காலமாக பெரும்பாலும் நடிகர்களுக்கு மட்டுமே (நதியா, குஷ்பு ஆகியோருக்கு வைத்தார்கள்) ரசிகர்மன்றம் என்ற நிலை மாறி இப்போது நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் வைக்க ஆரம்பித்துள்ளனர். முன்னணிநடிகைகளான திரிஷாவுக்கும், நமீதாவுக்கும் சமீப காலமாக ரசிகர் மன்றங்கள் அதிக அளவில் வரஆரம்பித்துள்ளன.

முன்பு குஷ்புவுக்கு கோவில் கட்டி புண்ணியம் தேடிக் கொண்ட ரசிகர்கள் அதே பாதையில் நடைபோடஆரம்பித்துள்ளனர், சற்றே வித்தியாசமாக. திரிஷாவுக்குத்தான் முதலில் ரசிகர் மன்றம் தோன்றியது.சென்னையைச் சேர்ந்த ஜெஸ்ஸி என்பவர்தான் தனது தோழிகள் சிலரோடு சேர்ந்து இந்த மன்றத்தைஆரம்பித்தார்.

பேனர் கட்டி பாலாபிஷேகம் செய்வது என்று கலக்கிய இந்த மன்றத்தினரை முதலில் திரிஷா ஏற்கவில்லை.பாலாபிஷேகம் செய்வது தேவையற்றது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாபிஷேகத்தை நிறுத்திக்கொண்டு, திரிஷா பட ரிலீஸின்போது தியேட்டர்களில் கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது என்றுஅமர்க்களப்படுத்தினர்.

உனக்கும் எனக்கும் பட ரிலீஸின்போது ஹீரோ ஜெயம் ரவியை விட திரிஷா ரசிகர்கள்தான் அதிக அளவில் கட்அவுட், பேனர் வைத்து, கொடி கட்டி அமர்க்களப்படுத்தியிருந்தனர்.

பின்னர் திரிஷாவை சந்தித்து தாங்கள் சமூக தொண்டாற்றும் நோக்கில்தான் மன்றத்தை நடத்தி வருவதாகஜெஸ்ஸி உள்ளிட்டோர் கூறவே அதை திரிஷாவும் ஏற்றுக் கொண்டு மன்றத்தினரை உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து திரிஷா ரசிகர்கள் இப்போது முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

தற்போது மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உறுப்பினர் சேர்ப்பைதீவிரப்படுத்தியுள்ளனராம். கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள், வேலை பார்க்கும் பெண்கள் எனகிட்டத்தட்ட 20,000 பேரை மன்ற உறுப்பினர்களாக்கியுள்ளனராம். 1 லட்சம் இலக்காம்.

திரிஷா ரசிகர்களுக்குப் போட்டியாக நமீதா ரசிகர்களும் களத்தை களேபரப்படுத்தி வருகின்றனர். முதன் முதலில்செல்வம் என்பவர் நமீதாவுக்காக ரசிகர் மன்றம் தொடங்கினார். அவரை நமீதா ஆதரித்து, அங்கீகரித்து தனதுமன்றத்தின் அகில இந்தியத் தலைவராக நியமித்துள்ளார்.

சென்னையில் மட்டும் நமீதாவுக்கு 50 மன்றங்கள் இருக்கிறதாம். மொத்தமாக 3000 ரசிகர்கர்கள்இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தி நமீதாவின் கரங்களை வலுப்படுத்தத்திட்டமிட்டுள்ளார்களாம்.

தனது ரசிகர்களை சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டுமாறு நமீதா அறிவுறுத்தியுள்ளாராம். நமீதாவின்ஆதரவால் உற்சாகமாகிப் போகியுள்ள மன்ற நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையை தற்போது முடுக்கி விட்டுமன்றத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையில் குதித்துள்ளனராம்.

இன்னும் கொஞ்ச நாளில் திரிஷா, நமீதா ரசிகர்கள் இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்றகோஷத்துடன் பட்டி தொட்டிகளை கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil