நியூயார்க் திரிஷா!
தமிழிலில் ஆரம்பித்த திரிஷா, தெலுங்குத் திரையுலகம் கொட்டிக் கொடுக்கத்தொடங்கியதால் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். இப்போதுதெலுங்கில் திரிஷா தான் நம்பர் ஒன். அவருக்கு அங்கே செம கிராக்கி.
தமிழிலும் தனது க்ரிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக விஜய், விக்ரம் எனமுன்னணி ஹீரோக்களுடன் அவ்வப்போது ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தாலும் அம்மணியின்மனசு மேல்நாட்டு கலாச்சாரத்தில்தான் மிதந்து கொண்டிருக்கிறது.
அவரிடம் போய் உங்களுக்குப் பிடித்த ஊர் எது என்று கேட்டால் ஆஸ்திரேலியாவில்ஆரம்பித்து அமெரிக்கா வரை பல ஊர்களை சொல்கிறாரே தவிர சென்னையையோ,ஹைதராபாத்தையே தப்பித் தவறிக் கூட கூறவில்லை.
அப்போதெல்லாம் எனது அப்பாவுக்கு வெளிநாடுகளுக்கு டூர் போக ஆண்டுக்கு ஒருதடவை பாஸ் கொடுப்பார்கள். அதை வைத்து பல நாடுகளுக்கு போயுள்ளேன்.
நடிகையான பிறகு பல வெளிநாடுகளுக்குப் போய் வந்து விட்டேன். சமீபத்தில் கூடஐரோப்பாவை ஒரு ரவுண்டு அடித்தேன். ரோம், வெனீஸ், வாடிகன் ஆகியநகரங்களுக்குப் போனேன். அப்பா, அந்த ஊர்களெல்லாம் எவ்வளவு அழகாக,சுத்தமாக இருக்கிறது. நம்ம ஊரும்தான் இருக்கிறதே! (இருக்கும், இருக்கும்!)
ரொம்ப நல்லா கீது மாமீ!


Click it and Unblock the Notifications