»   »  திரிஷாவின் திருகல்!

திரிஷாவின் திருகல்!

Subscribe to Oneindia Tamil
திரிஷா கால்ஷீட் குழப்பதால் அவர் சம்பந்தப்பட்ட இரு படங்கள் தொங்கலில்நிற்பதாக தயாரிப்பாளர்கள் புலம்பலில் உள்ளனர்.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற படத்தில் நடித்து வருகிறார்திரிஷா. இப்படத்தை கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஸ்டாலின்படத்தில் நடிப்பதற்காக தமிழில் இரண்டு படங்களுக்கு ஏற்கனவே கொடுத்திருந்ததேதிகளை அப்படியே ஸ்வாஹா செய்து ஸ்டாலின் படத்திற்குக் கொடுத்து விட்டார்திரிஷா.

இதனால் அந்த இரண்டு படங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

முதல் படம் ஜெயம் ரவியுடன் நடித்து வந்த சம்திங் சம்திங் உனக்கும், எனக்கும்.இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகளை சுட்டு முடித்து விட்டார் ரவியின் அண்ணாச்சிராஜா.

திரிஷா, ரவி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம். ஆனால்அதற்குள் திரிஷா, ஸ்டாலினுக்கு ஓடி விட்டார். இதனால் படத்தை முடிக்க முடியாமல்உட்கார்ந்திருக்கிறார்களாம் ராஜாவும், ரவியும்.

இப்போது ரவிக்கு மார்க்கெட் டவுன் ஆகி விட்டதால், திரிஷா கூப்பிட்டு திட்டவும்முடியாத நிலையில் தர்மசங்கடமாக தவித்துக் கொண்டிருக்கிறார்களாம் அண்ணனும்,தம்பியும். பாட்டை முடிச்சுக் கொடுத்திடும்மா என்று ராஜா பலமுறை திரிஷாவைபோனில் கெஞ்சியும், கூட ஸ்டாலினை முடித்து விட்டுத்தான் வருவேன், வெயிட்செய்யண்டி என்று கூறி விட்டாராம் திரிஷா.

இதனால் கடுப்பில் இருக்கிறார்கள் ராஜா குடும்பத்தினர். இருந்தாலும் வேறுவழியில்லாததால், திரிஷாவுக்காக காத்திருக்கிறார்களாம். அதேசமயம், திரிஷாவைடம்மி ஆக்கும் விதமாக கிளாமர் காட்சிகளை தூக்கலாக வைக்கத் திட்டமிட்டுள்ளாராம்ராஜா.

ஏற்கனவே இப்படத்திற்காக கொடுத்த கால்ஷீட் தேதிகளை எடுத்துத்தான் விஜய்யின்ஆதி, பவுர்னமி (தெலுங்கு) படங்களுக்குக் கொடுத்திருந்தார் திரிஷா. இதனால் சம்திங்படம் ஒரு வருடமாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்போது மேலும் தாமதமாகிவருவதால் ராஜா, ரவி இருவருமே டென்ஷனாகியுள்ளனர்.

இதேபோல பெட்ரோல் படம் திரிஷாவின் சொதப்பலால் தொங்கலில் நிற்கிறது.பிரஷாந்த்துடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் திரிஷா. இப்படம் பூஜைபோடப்பட்டும் கூட ஒரு நாள் ஷூட்டிங் கூட இன்னும் நடக்கவில்லையாம்.

படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டதோடு சரியாம், இதுவரைஇப்படத்திற்கு டேட்ஸ் கொடுக்காமல் இருக்கிறாராம் திரிஷா.

தமிழைப் புறக்கணிக்கும் திரிஷா, தெலுங்குக்கு மட்டும் முக்கியத்துவம்கொடுப்பதற்கு டப்புதான் முக்கியக் காரணம். படத்தை எடுத்து விட்டோம், இனிமேல்திரிஷாவை தூக்கி எறிய முடியாது என்பதால் சம்திங் சம்திங் யூனிட்டும், கதைக்குபொருத்தமாக இருப்பார் என்பதால் பெட்ரோல் யூனிட்டும் திரிஷாவுக்கு இலவு காத்தகிளிகள் போல காத்திருக்கிறார்கள்.
Please Wait while comments are loading...