»   »  திரிஷாவும், ஆட்டுகுட்டியும்!

திரிஷாவும், ஆட்டுகுட்டியும்!

Subscribe to Oneindia Tamil
ஒரு சின்ன ஆட்டுக்குட்டியால் திரிஷா நடித்த சம்திங் சம்திங் உனக்கும், எனக்கும்தடைபட்டு நிற்கிறது.

இந்தியா முழுவதும் 80க்கும் மேற்பட்ட படங்கள் புதுச் சிக்கலில் தொக்கி நிற்கின்றன.மும்பை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள ஒரு உத்தரவால் வந்த வினை இது.

படத்தில் விலங்குகள் காட்டப்பட்டிருந்தால், அப்படத்திற்கு பிராணிகள் நலவாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.அப்போதுதான் அப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க முடியும்.

இந்த புதிய உத்தரவால் நாய், பூனை, குதிரை, ஆடு, மாடுகளை வைத்து படம்எடுத்தவர்கள், படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் கடுப்பாகி உட்கார்ந்திருக்கிறார்கள்.

வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசியும்இந்த சிக்கலில் சிக்கித் தவித்தது. உயர்நீதிமன்றத்தில் கூட வழக்குப் போட்டிருந்தனர்.ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, மத்தியசுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவிடம் பேசி படத்தை வெளியே கொண்டு வர

உதவினார்.

இம்சைக்கு ஏற்பட்ட அதே சிக்கல்தான் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங்படத்துக்கும் நேர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் விலங்குகளை விலாவாரியாக யூஸ் பண்ணவில்லை என்றாலும் கூடஒரே ஒரு ஆட்டுக்குட்டியால் வந்தது வினை. நாயகி திரிஷா, படம் முழுவதும் ஒருஆட்டுக்குட்டியுடன் வருகிறாராம். இந்த ஆட்டுக்குட்டி, திரிஷாவின் கையில், மடியில்தவழ்ந்து விளையாடுகிறதாம்.

திரிஷாவின் பிடியில் சிக்கியுள்ள ஆட்டுக்குட்டியை சிரமப்படுத்தி படம்எடுத்திருப்பீர்கள் என்று கூறிய தணிக்கை வாரியம், பிராணிகள் நல வாரியம் ஓ.கே.சொன்னால்தான் சான்றிதழ் என்று திருப்பி அனுப்பி விட்டார்களாம் சம்திங் சம்திங்படத் தயாரிப்பாளர்களை.

ஆட்டுக்குட்டியை கையில் கொடுத்து நடிக்க வைத்ததற்காக இப்படி ஒரு நொம்பலமாஎன கடுப்பாகிப் போன தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.

சும்மா வச்சுக்கிட்டதுக்கே இந்தப் பஞ்சாயத்து என்றால் ஆட்டுக்கார அலமேலுபடத்தை இப்போ எடுத்தால் என்ன ஆகும்?

Read more about: trishas film faces trouble
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil