»   »  பறக்குது திரிஷா கொடி!

பறக்குது திரிஷா கொடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
திரிஷாவின் ரசிகைகள் வரலாறு படைக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமா உலகவரலாற்றிலேயே முதல் முறையாக திரிஷா ரசிகைகள் மன்றத்திற்கென தனிக் கொடிஉருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கு இருப்பதைப் போல தமிழ் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம்இருப்பதில்லை. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ரொம்ப காலம் இருந்த குஷ்புவுக்குகோவில் கட்டி அழகு பார்த்தவர்கள் நமது ரசிகர்கள.

சிம்ரனுக்கும் அதே அளவிலான அன்பைக் காட்டியவர்கள் ரசிகப் பெருமக்கள்.ஆனால் அவருக்கு தனி ரசிகர் மன்றம் உருவாகவில்லை.

ஆனால் இவர்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு திரிஷாவுக்கென தனி ரசிகைமன்றம் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டது. திரிஷாபடத்திற்கு பாலாபிஷேகம் செய்து அசத்தினர் ரசிகைகள்.

ஜெஸ்ஸி என்பவர்தான் இதன் தலைவி. இதன் செயலாளராக ராம்ராஜம்,பொருளாளராக சுபாஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மன்றத்தைவரவேற்ற திரிஷா, ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள், பாலாபிஷேகம் போன்றவைஎல்லாம் வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தார்.

இந்த மன்றம் இப்போது விரிவாகியிருக்கிறதாம். மாநிலம் முழுவதும "பல ஆயிரம்பெண்கள் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனராம்.

அடுத்த கட்டமாக இப்போது மன்றத்திற்கென கொடியை உருவாக்கியுள்ளனர். நீலம்மற்றும் சிவப்பு வண்ணத்தில் கொடி உருவாகியுள்ளது. நடுவில் திரிஷாவின் உருவம்நட்சததிரத்தின் நடுவில் அசத்தலாக ஜொலிக்கிறது.

திரிஷா நடித்து வெளியாகியுள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின்ரிலீஸையொட்டி கொடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையில் இப்படம்வெளியாகியுள்ள தியேட்டர்கள் முன்பு திரிஷா ரசிகை மன்ற கொடியும் பட்டொளிவீசிப் பறக்கிறது.

இதுதவிர கட் அவுட், பேனர்கள் என தூள் கிளப்பியுள்ளனர் இந்த ரசிகை மன்றத்தினர்.இதைப் பார்த்து ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்கள் பொறாமைப்படுவதையும் பார்க்கமுடிகிறது.

மேலும் இந்த மன்றத்திற்கென தனியாக இணையதளத்தை தொடங்கியுள்ள ரசிகைகள்விரைவில் ரத்த வங்கி, அனாதை இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றையும்தொடங்கப் போகிறார்களாம்.

மன்றத்தின் சார்பில் 10 குழந்தைகளை (அதில் 2 பேர் மன வளர்ச்சி குன்றியவர்கள்)தத்தெடுத்துப் படிக்க வைத்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். இந்தமன்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறுநாடுகளிலிருந்தும் ரசிகைகள் ஆர்வத்தோடு விசாரிக்கிறார்களாம்.

அவர்களுக்கு மெம்பர் கார்டை அனுப்பி வைத்து வருகிறார்கள்.

அப்படிப் போடு போடு போடு....!

Read more about: trisha fans launch new flag

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil