Trisha 42: காதலை பற்றி அப்பவே சொன்ன த்ரிஷா.. அந்த விஷயம் மட்டும் பிடிக்காதாம்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் த்ரிஷாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் வயதில் பீல்ட் அவுட்டான நடிகைகள் அதிகம் இருக்கின்றனர். இன்றும் திரையில் வெற்றிகரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். வெற்றிக்கு அழகும் மட்டும் அல்ல திறமையும் முக்கியம் என்பதை நிரூபித்து வருகிறார். இதனிடையே, இவரது சினிமா கரியரில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதில் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொண்ட அனுபவத்தை இங்கு காணலாம்.
சிம்பு - த்ரிஷா நட்பு: அலை படத்தின் மூலம் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த படத்தின் மூலம் இருவருக்குமான நட்பு தொடர்கிறது. ஆன் ஸ்கீரினில் கெமிஸ்ட்ரிடை அள்ளித்தரும் இந்த ஜோடி நிஜ வாழ்வில் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். சிம்பு - த்ரிஷா என்ற பெயர் சொன்னாலே வதந்திகளும் சேர்ந்து வந்துவிடும். இன்று வரை இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுவதை காணலாம். இதேபோன்று தனது 35ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் ஒவ்வொருவரும் த்ரிஷாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரித்தார்கள். சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா சிம்பு குறித்து அழகாக கூறிவிட்டு சென்றார். அதில், சிம்பு எனக்கு நல்ல நண்பன். அதை தவிற வேறு எதுவும் இல்லை தெரிவித்தார். அதேபோன்று சமீபத்தில் த்ரிஷா குறித்து சிம்புவும் த்ரிஷா குறித்து கூறியிருந்தார். எங்க இருவருக்கும் இருப்பது நட்பும் அல்ல, காதலும் அல்ல. அது ஒரு வகையான அன்பு. ஆதரவு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு: தெலுங்கில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்த த்ரிஷா, மகேஷ் பாபுவுடன் இணைந்து 2 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் நடித்துக்காெண்டிருந்த போது மகேஷ் பாபு குறித்து த்ரிஷா கூறியதாவது, மகேஷ் பாபுவுடன் இணைந்து அதடு மற்றும் சைனிகுடு போன்ற படத்தில் நடித்திருக்கிறேன். அவர் நல்ல நண்பர், மிகவும் பண்பான மனிதரை பார்த்ததே இல்லை. தன்னுடன் பணியாற்றும் அனைவருடனும் மரியாதையாக பழகுவார். பட ஷூட்டிங் நேரத்தில் எவ்வளவு நேரமாக இருந்தாலும் மானிட்டரை விட்டு விலகவே மாட்டார். கடினமான உழைப்பாளி. அவருடன் இணைந்து யார் நடித்தாலும் அதன் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து கவனிப்பார் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் பரிசு: த்ரிஷா யாரிடம் மரியாதையை மட்டும் அல்ல பரிசை கூட கேட்டு பெறுவதில்லை என தெரிவித்திருக்கிறார். முன்னதாக ரசிகர்களுடன் சமூகவலைதளங்களில் உரையாடிய த்ரிஷா, பிறந்தது முதல் தற்போது வரை கொடுப்பதுதான் முக்கியம் என்பதால் பரிசுகளில் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை என பதில் அளித்தார். எல்லா நடிகர், நடிகைகளிடம் ஒரு வயதுக்கு வந்த பின்னர் கேட்கும் கேள்வி திருமணம் அல்லது காதல் குறித்து கேட்பார்கள். அதற்கு மனம் திறந்து பேசிய த்ரிஷா, "ஒரு பைத்தியக்காரத்தனமாக காதலையே தான் விரும்புகிறேன். அது காதலாக இருந்தாலும் நல்லது, கல்யாணத்திற்கு பிறகு இருக்கும் காதலாக இருந்தாலும் நன்று என தெரிவித்தார். அண்மையில் தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட காதல் குறித்து தெளிவாக பேசியிருந்தார் த்ரிஷா. அதாவது, காதல் வந்தாலும், வராவிட்டாலும் நல்லது தான். எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். காதலிப்பது தவறு இல்லை என்பதை கடைப்பிடிக்கிறேன் என கூறியுள்ளார்.

விஜய் ரொம்ப ஸ்பெஷல்: தமிழ் திரையுலகில், விஜய், அஜித் படங்களில் அதிகமுறை ஜோடியாக நடித்தவர் த்ரிஷா. சமீபத்தில் லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி வரை நடித்திருக்கிறார். இவர்கள் இருவரிடமும் இருந்தும் சினிமா குறித்தும் தனிப்பட்ட முறையில் பழகிய தருணங்களையும் த்ரிஷா பகிர்ந்திருக்கிறார். விஜய் குறித்து முன்னதாக அவர் அளித்த பேட்டியில், விஜய்யிடம் ஒரு அமைதியான சாந்தி இருக்கும். ரொம்ப அமைதியா இருப்பார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே ரொம்ப ஸ்பெஷல் தான். எங்க 2 பேரையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக ரசிகர்களே தெரிவித்திருக்கிறார்கள், அதுவும் திருப்பாச்சி, கில்லி படங்கள் டிவியில் ஓடினால் அன்று மட்டும் எனக்கு அதிக மெசேஜஸ் வரும். இந்த ஜோடியை ரொம்ப மிஸ் பன்றோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், கில்லி படத்தில் காரபொடி கேட்பார் த்ரிஷா. இதுவரை வாங்கி தரவில்லை என தெரிவித்திருப்பதாக ஜாலியாக த்ரிஷா கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











