»   »  ரசிகைகளுடன் த்ரிஷா

ரசிகைகளுடன் த்ரிஷா

Subscribe to Oneindia Tamil

நடிகை த்ரிஷா நாளை தனது ரசிகைகளுடன் பொழுதை கழிக்கவுள்ளார். அப்போதுசில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளாராம்.

இந்தியாவிலேயே நடிகைக்கு ரசிகைகளால் மன்றம் ஆரம்பிக்கப்பட்டதுத்ரிஷாவுக்குத்தானாம். தென்னிந்திய கனவுதேவதை த்ரிஷா ரசிகை மன்றம் என்றபெயரில் அது சமீபத்தில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. (இதற்கு மறைமுகபைனான்ஸ் த்ரிஷாவின் அம்மா உமா தான் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்)

ஜென்னி என்பவர்தான் இதற்குத் தலைவி. இந்த மன்றத்தினர் த்ரிஷா புதுப்படங்கள்வெளியாகும்போது பேனர் கட்டியும், கட்-அவுட் வைத்தும் அசத்தி வருகின்றனர்.சமீபத்தில் உனக்கும், எனக்கும் படத்திற்காக சென்னை தியேட்டரில் த்ரிஷாவுக்குபிரமாண்ட கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தி அசத்தினர்.

இதனால் படத்தின் ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கும், த்ரிஷாவின்ரசிகைகளுக்கும் இடையே அடிதடியே நடந்தது.

த்ரிஷா மன்றத்தினர் மடிப்பாக்கத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குஉதவிகளும் வருகிறது. மேலும், 2 ஏழை மாணவிகளுக்கு படிப்பு உதவியும்செய்கிறது.

இந் நிலையில் நாளை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ரசிகை மன்றம் ஏற்பாடுசெய்துள்ளது.அதன்படி அடையாறு புற்று நோய் மருத்துவினைக்கு த்ரிஷா செல்கிறார்.அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ரசிகைகள் மன்றம் சார்பில் பரிசுப்பொருட்களை வழங்குகிறார்.

அவர்களுக்கு மதிய உணவையும் தனது கையால் பரிமாறுகிறார். அதன் பின்னர் ரசிகைமன்றம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்த்ரிஷா.

ஏக பில்ட்-அப்பா இருக்கேப்பா...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil