»   »  அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்!

அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழிலும், தெலுங்கிலுமாக இனி மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளாராம் திரிஷா.

தமிழில் அறிமுகமாகி அப்படியே தெலுங்குக்குத் தாவி இப்போது தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கரொம்பவே கிராக்கி பண்ணும் அளவுக்கு தெலுங்கில் திரிஷாவின் மார்க்கெட் படு ஸ்டிராங்காகிப் போய்க்கிடக்கிறது.

விக்ரம், விஜய் போன்ற பெத்த நடிகர்கள் படங்கள் என்றால் மட்டுமே தமிழில் கால்ஷீட் கொடுக்கிறார் திரிஷா.மற்றவர்களுக்கு திரிஷா கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது.

தெலுங்கில் திரிஷா நடித்து வெளியாகியுள்ள ஸ்டாலின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பி வருகிறது.இதனால் இடையில் கொஞ்சம் போல தேக்கமடைந்திருந்த திரிஷாவின் மார்க்கெட் மறுபடியும் படு சூடாககிளம்பியுள்ளது.

ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் திரிஷாவைத் தேடி ஓடி வந்து கொண்டிருக்கிறார்களாம். திரிஷாவுக்கு இப்போதுதெலுங்கில் சம்பளம் எவ்ளோ தெரியுமா? அம்மணிதான் அங்கே கோடீஸ்வர நாயகி. 1 கோடியை சம்பளமாகபெறுகிறார் திரிஷா.

கோடி கேட்டாலும் பரவாயில்லை, நடிச்சா போதும் எனும் அளவுக்கு திரிஷா போதை தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களின் கண்களை மறைத்துக் கிடக்கிறது.

தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வருவதால் செலக்டிவ்வாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் திரிஷா.அதேசமயம் தமிழையும் விட்டு விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் திரிஷா.

முன்பு தமிழை விட தெலுங்குக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதனால் நயனதாரா, அசின் எனஏகப்பட்ட பேர் ஏறிப் போய் விட்டனர். மீண்டும் திரும்பி வந்தால் பெரிய ரேஞ்சுக்கு சம்பளம் கேட்க முடியாதநிலை உள்ளது.

இதனால் தெலுங்கில் நடிப்பது போலவே தமிழிலும் அதிக படங்களில் நடிக்கப் போகிறாராம் திரிஷா.தெலுங்கிலும், தமிழிலும் மாறி மாறி நடிக்கும் திட்டம் உள்ளதாம் திரிஷாவிடம்.

இதற்காக தனது அம்மாவை சென்னையிலேயே தங்கியிருந்து, வருகிற தயாரிப்பாளர்களிடம் பேசி, கதை கேட்டுஅதை தனக்கு இ மெயிலில் அனுப்பி வைக்குமாறு திரிஷா கூறியுள்ளாராம். அந்த மெயிலை ஹைதராபாத்தில்இருந்தபடி படித்து, கதை பிடித்தால் உடனே கால்ஷீட்தானாம்.

தமிழில் தனது சம்பளத்தை 75 லட்சமாக நிர்ணயித்துள்ளாராம் திரிஷா. தொடர்ந்து 3 படங்கள் ஹிட் ஆனால்இங்கேயும் கோடிதானாம்.

அப்படி போடு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil