விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா.. 22 ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் த்ரிஷா.. கொடி பறக்குதே!

சென்னை: நடிகை த்ரிஷா சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழியாக நடித்த அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக இன்னமும் முன்னணி ஹீரோயினாக பல படங்களுடன் செம பிசியாக நடித்து வருகிறார்.

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என ஆதிக் ரவிச்சந்திரன் படமெடுத்து அஜித் குமாரையும், த்ரிஷாவையும் வைத்தே குட் பேட் அக்லி படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு தொடர்ந்து அனைத்து டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

trisha vijay heroine


கோலிவுட்டில் தற்போது நம்பர் ஒன் ஹீரோயின் என்றால் அது த்ரிஷா மட்டும் தான் என்கின்றனர். நயன்தாராவுக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு திடீரென குறைந்த நிலையில், கோலிவுட்டில் த்ரிஷா கொடி தான் பறக்கிறது என்றும் அடுத்து சூர்யாவின் படத்திலும் அவர் கமிட்டாகி இருப்பதை குறிப்பிட்டு #Trisha ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய்யுடன் 2 படங்கள்: நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடியாக சமீபத்தில் நடித்த த்ரிஷா இந்த ஆண்டு வெளியான கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து மட்ட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார். தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், அந்த படத்திலும் த்ரிஷா ஸ்பெஷல் டான்ஸ் போட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அஜித் குமாருடன் 2 படங்கள்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் மனைவியாக த்ரிஷா நடித்துள்ளார். மொத்த படத்திலும் த்ரிஷாவை தேடிக் கண்டுபிடிப்பதே அஜித்தின் வேலை என்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின். அடுத்த ஆண்டு அஜித்தின் 2 படங்களில் த்ரிஷாவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்திலும்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். கமல்ஹாசனுக்கு அபிராமியும், சிம்புவுக்கு த்ரிஷாவும் ஜோடியாக இருப்பார்களா? அல்லது கமலுக்கு த்ரிஷா ஜோடியா என்பது படம் வந்தால் தான் தெரியவரும். ஏற்கனவே மன்மதன் அம்பு படத்திலும் கமல்ஹாசன் உடன் இணைந்து த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் இணைந்த த்ரிஷா: 22 ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவில் ஹீரோயினாக த்ரிஷா அறிமுகமானதே சூர்யாவுடன் தான். மெளனம் பேசியதே படத்திற்கு பிறகு ஆறு படத்திலும் சூர்யா - த்ரிஷா ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணியம்மன் படத்தில் த்ரிஷா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், சூர்யா நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி மாசாணியம்மன் கோயிலில் பூஜை போடப்பட்டது. படத்தின் பூஜையில் ஹீரோயின் யாரும் வராத நிலையில், நேற்று ஆர்ஜே பாலாஜி த்ரிஷாவை சூர்யா படத்தில் ஆன்போர்ட் செய்துள்ளார். 5 வருடங்கள் கூட தாக்குப்பிடிக்காமல் பல நடிகைகள் ஃபீல்ட் அவுட் ஆகிவரும் நிலையில், 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக த்ரிஷா வலம் வருவது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவால் தான் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X