ராணாவுடன் திருமணம் நடந்ததா... இல்லையா? - த்ரிஷா விளக்கம்

By Shankar

சென்னை: தெலுங்கு நடிகர் ராணாவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று நடிகை த்ரிஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் திருமண விவகாரம் கன்னித்தீவு கதையை விட பெரிதாக இருக்கும் போலிருக்கிறது.

ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என பேட்டி தருவார்... அடுத்த நாளே 'எப்போ அப்படிச் சொன்னேன்... எனக்கு ப்ரெண்ட்ஸ், பார்ட்டிதான் முக்கியம்,' என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா நான்கு நிருபர்களை மட்டும் கூப்பிட்டு 'மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன்.. இந்த வருஷம் பாப்பாவுக்கு கல்யாணந்தான்,' என்று புதிதாக ஆரம்பிப்பார். மீண்டும் அடுத்த நாள் 'இன்னாருடன் எனக்கு நெருக்கமான உறவிருக்கிறது' என்று த்ரிஷா புதுக் கதை ஆரம்பிப்பார்.

ஏதாவது பெரிய பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே த்ரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார்.

கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது த்ரிஷாவின் கல்யாண சமாச்சாரம்!

சமீபத்தில் திரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் பரவின. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கப்பட்டதால், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இருவரும் விருந்துகளில் கலந்து கொண்டு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர், அதுவும் கட்டிப்பிடித்தபடி. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக பழகுவதாக சொன்னார். இரு தினங்களுக்கு முன் திரிஷாவுக்கும், ராணாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.

அப்போது திரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரத்தை விரலில் அணிவித்தார் என்றும் நகை பெட்டி ஒன்றையும் திரிஷா கையில் கொடுத்தார் என்றும் கூறினர். இதில் இரு வீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து திரிஷாவிடம் கேட்போது வழக்கபோலவே மறுத்தார். "எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ராணா எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்," என்றார்.

விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் ஒரு சின்னப் பையன் கல்யாணத்தை பற்றி அடிக்கும் கமெண்டை தலைப்பாக வைக்கச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X