குஷ்பு மகள் திருமணம்.. திரிஷாவுடன் ஆர்த்தி ரவி எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. விமர்சனம் இப்படி வருதே?

சென்னை: குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவின் திருமணம் நேற்று முன்தினம் கோவாவில் சூப்பராக நடைபெற்றது. அதில் திரிஷா, ஆர்த்தி ரவி, நாகார்ஜுனா, டிடி, தமன்னா, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். சூழ்ல் இப்படி இருக்க திரிஷ, ஆர்த்தி உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டான சூழலில்; இப்போது அதை வைத்து விமர்சனமும் எழுந்திருக்கிறது.

ரவி மோகனுக்கும், ஆர்த்தி ரவிக்கும் இருக்கும் பிரச்னை ஊரே அறிந்தது. ஆர்த்தி தரப்பு தன்னை மதிக்கவில்லை என அந்த உறவிலிருந்து வெளியேறிய ரவி; கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் தன்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் அப்படி இருப்பதை ஆர்த்தி விரும்பவில்லை. எப்படியாவது ரவியோடு சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என்றுதான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் ரவி தரப்போ அதற்கு எந்த ஒரு பாசிட்டிவ் சிக்னலையும் கொடுக்கவில்லை.

Trisha and Aarthi Ravi s Photos from Khushbu s Daughter Avantika s Wedding Spark Online Debate
Photo Credit:

கொதித்த ஆர்த்தி ரவி: மேலும் இந்த விவகாரத்தில் ஆர்த்தியிடமிருந்து ரவியை கெனிஷா அபகரித்துவிட்டார் என்றும் எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக கெனிஷாவே ஒரு வீடியோவை வெளியிட்டு, ரவியிடமிருந்து விலகுவதாகவும், அவரது குடும்பத்தை நான் பிரிக்கவில்லை என்று விளக்கமளித்திருந்தார். ஆர்த்தியோ, 'தூங்கி கொண்டிருக்கும் தாய் சிங்கத்தை எழுப்பாதீர்கள்' என எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் முற்றிபோனதைத் தொடர்ந்து ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read
Con City Blue Sattai Maran Review - கான் சிட்டி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம ஏமாற்றமாம்
Con City Blue Sattai Maran Review - கான் சிட்டி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம ஏமாற்றமாம்

குஷ்பு சப்போர்ட்: இவ்விவகாரத்தில் குஷ்பு தனது முழு ஆதரவையும் ஆர்த்திக்குத்தான் கொடுத்திருக்கிறார். இதில் குஷ்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறார் என்றால்; ரவிக்கும், ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் ஆனதற்கு காரணமே அவர்தான். எனவே அவரது இதில் அவரது ஒவ்வொரு மூவ்வும் கவனிக்கப்படுகின்றன. ரவி செய்தியாளர் சந்திப்பு குறித்துகூட அவர் அட்டாக் செய்துதான் போஸ்ட் போட்டிருந்தார். இப்படி தனக்கு முழு சப்போர்ட்டாக இருப்பதாலும், நெருக்கம் என்பதாலும் குஷ்புவின் மகள் அவந்திகா திருமணத்தில் தவறாமல் கலந்துகொண்டார் ஆர்த்தி.

Trisha and Aarthi Ravi s Photos from Khushbu s Daughter Avantika s Wedding Spark Online Debate
Photo Credit:

கலக்கல் ஃபோட்டோக்கள்: திருமணத்துக்கு நாகார்ஜுனா, அமலா, திரிஷா, தமன்னா, பிருந்தா மாஸ்டர், டிடி உள்ளிட்டோர் எல்லாம் சென்றிருந்தார்கள். கோவாவில் கோலாகலமாக திருமணம் நடந்தது. விரைவில் சென்னையில் வரவேற்பும் நடக்கவிருக்கிறது. அந்தத் திருமணத்தில் திரிஷா, ஆர்த்தி ரவி உள்ளிட்டோர் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அது புது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

என்ன ஆனது?: அதாவது, விஜய் - சங்கீதா விவகாரத்தில் திரிஷாவின் பெயர் அதீதமாகவே அடிபடுகிறது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நல்லது,கெட்டதுகளுக்கு செல்வதும், சமீபத்திய பிறந்தநாளை திரிஷாவுடன் விஜய் கொண்டாடியதும் அந்தப் பேச்சுக்களுக்கு சலங்கை கட்டிவிட்டிருக்கின்றன. விஜய் விவாகரத்து பிரச்னைக்கு முழு முதல் காரணம் திரிஷா மட்டும்தான் என பலரும் அடித்து சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் தன்னுடைய கணவரை கெனிஷா அபகரித்துவிட்டார் என்ற தொனியில் செயல்பட்ட ஆர்த்தி; இப்போது திரிஷாவுடன் ஏன் கொஞ்சி குலாவி ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்திலிருந்து திரிஷாவின் பெயர் மறையும் வரையோ அல்லது முறையான அறிவிப்புகள் வந்த பிறகோ இதுமாதிரி இருந்துகொள்ளலாமே; தங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? என நெட்டிசனஸ் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

அதேசமயம், இதில் எல்லாமா குற்றம் காண்பது; விஜய் விவகாரத்தில் திரிஷாவின் பெயரை தேவையில்லாமல் இழுப்பது திட்டமிட்ட ஒன்று; அதற்கும் ஆர்த்தி ரவி எடுத்துக்கொண்ட ஃபோட்டோவுக்கும் என்ன தொடர்பு? எனவும் திரிஷாவின் ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்பிவருகிறார்கள். ஆகமொத்தம் இந்த விவகாரம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X