யப்பா வெறித்தனமா இருக்காங்களே.. GOAT படம் பார்த்த திரிஷா, கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: விஜய் நடித்திருக்கும் GOAT படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. வெங்கட் பிரபுவை பலரும் பாராட்டிவருகிறார்கள். படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவிலும், க்ளைமேக்ஸிலும் அவர் பட்டையை கிளப்பிவிட்டார் என்றும்; விஜய்க்கு ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் பார்சல் என்றும் கூறிவருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் GOAT படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்திருக்கிறார்கள். அந்தவகையில் திரிஷாவும், கீர்த்தி சுரேஷும் இன்று ஃபர்ஸ்ட் ஷோவுக்கு ஆஜராகிவிட்டனர்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. இதன் காரணமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் GOAT படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25ஆவது படமாக GOAT தயாராகியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌதரி, லைலா என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

பிரமாண்ட ரிலீஸ்: படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் முதல் இரண்டு காட்சிகளுக்கு விமர்சனம் கொடுக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் விஜய்யின் ரசிகர்களாகவே இருப்பார்கள். அதன் காரணமாக படத்தின் உண்மையான ரிசல்ட் நாளைதான் தெரியும் என்றும் ஒருதரப்பினர் கூறிவருகிறார்கள்.
படத்தின் ப்ளஸ்: படத்தின் பெரிய ப்ளஸ்ஸாக வெங்கட் பிரபுவின் ஸ்க்ரீன் ப்ளேவை சொல்கிறார்கள் படம் பார்த்த ரசிகர்கள். அதுமட்டுமின்றி டபுள் ஆக்ஷனில் விஜய் பட்டையை கிளப்பிவிட்டார் என்றும்; விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்தால் நன்றாக இருக்காது என்ற பேச்சை மெர்சல் படத்துக்கு பிறகு GOAT அடித்து நொறுக்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும், க்ளைமேக்ஸில் எல்லாம் வேற லெவல் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொல்லிவருகிறார்கள்.
மெகா ஹிட்தான்: அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக வெங்கட் பிரபு கொடுத்தாரோ அதேபோல் GOAT படத்தையும் கொடுத்துவிட்டார். எனவே கண்டிபபக இந்தப் படம் வசூல் வேட்டை நடத்தப்போவது உறுதி என்றும் கூறுகிறார்கள். இதற்கிடையே சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் GOAT படத்தின் ரிலீஸை கொண்டாட ஆரம்பித்து; முதல் நாள் முதல் காட்சியை திரையரங்குகளுக்கு சென்று பார்த்துவருகிறார்கள்.
திரிஷா, கீர்த்தி சுரேஷ்: அந்தவகையில் நடிகை திரிஷா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தார். இந்தப் படத்தில் அவரும் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும், ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்த்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்கள் ட்ரெண்டாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் யப்பா திரிஷாவும், கீர்த்தியும் வெறித்தனமான விஜய் ரசிகைகளாக இருக்கிறார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











