அடேங்கப்பா.. 96 ஜானுவாக மாறிய பிரியங்கா.. நடிகை திரிஷா என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனங்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே 96 ஜானுவாக மாறியுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே டைட்டில் வின் பண்ணுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரன்னர் அப் ஆனார்.

முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை அத்தனை புரமோக்களிலும் இருந்த பிரியங்காவை ரசிகர்கள் தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பார்த்து வருகின்றனர்.

அல்டிமேட்டுக்கு வரலை

அல்டிமேட்டுக்கு வரலை

முதல் சீசனில் ரன்னர் அப் ஆன சினேகன், நான்காவது சீசனில் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் எல்லாம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், பிரியங்கா பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவில்லை. வைல்டு கார்டாக ஓவியா வராத நிலையில், பிரியங்காவை வரச் சொல்லி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

96 ஜானு கெட்டப்பில்

96 ஜானு கெட்டப்பில்

தனது பிக் பாஸ் பக்கெட் லிஸ்ட்டை முடித்துக் கொண்ட பிரியங்கா, விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், பிரியங்கா தற்போது 96 பட ஜானு போல அச்சு அசலாக அப்படியே இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

திரிஷா கமெண்ட்

திரிஷா கமெண்ட்

அப்படியே அச்சு அசல் திரிஷா போலவே பிரியங்கா மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வரும் நிலையில், ஒரிஜினலுக்கு சொந்தக்காரரான நடிகை திரிஷாவே பிரியங்காவின் புகைப்படத்தை பார்த்து 'ஹாஹா லவ்' என போட்ட கமெண்ட் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது.

96kg திரிஷா

96kg திரிஷா

இதுதான் 96 பட திரிஷாவின் ஒரிஜினல் புகைப்படம். இது 96 கிலோ உள்ள பிரியங்காவின் புகைப்படம் என நெட்டிசன்கள் சிலர் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்தால் உடம்பு அப்படியே குறைந்து ஸ்லிம்மானது போல இருக்கும் என்றும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

எப்பவுமே ஹேப்பி

எப்பவுமே ஹேப்பி

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே எப்போதுமே ஹேப்பியாக இருப்பவர். அவரை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயல்வார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாலி பிரியங்காவையும், கோவப்படும் பிரியங்காவையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். விரைவில் வரவுள்ள ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் தான் இந்த கெட்டப்பில் பிரியங்கா வர போகிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X