அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! இந்த துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!
புதிய படமொன்றில் நடிகை த்ரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்
சென்னை: என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிகை த்ரிஷா அம்மாவாக நடிக்கிறார்.
பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகை சினிமாவில் அதே மவுசுடன் இருக்க முடியுமா என்று கேட்டால் தைரியாமாக ஏன் முடியாது? அதுதான் த்ரிஷா இருக்கிறாரே எனச் சொல்லலாம்.

ஆரம்பகாலங்களில் சினிமாவின்மீது த்ரிஷா கொண்ட காதல் நாளுக்கு நாள் அதிகமாகி அவருடைய அழகும் நடிப்பும் மெருகேறிக்கொண்டே போகிறது. இது விஜய் சேதுபதியுடன் அவர் நடித்திருக்கும் 96 திரைப்பட டீசர் பார்த்தவர்களின் மைண்ட் வாய்ஸ்.
குழந்தைக்கு தாயாக நடித்தால் ஹீரோயின் இமேஜ் போய்விடும், ஆண்ட்டி ஹீரோபோல ஆண்ட்டியான ஹீரோயின் என்றெல்லாம் விமர்சிப்பார்கள் என பொதுவாக நடிகைகள் பயப்படுவதுண்டு. அதற்கு விதிவிலக்காக, ஒரு பெண்குழந்தைக்கு தாயாக "என்னை அறிந்தால்" படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்த கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது மீண்டும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இயக்குனர் திருஞானம் இயக்கும் "பரமபதம் விளையாட்டு" என்ற படத்தில் மருத்துவராக நடிக்கும் த்ரிஷா ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிக்கிறார்.
இப்படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரேயொரு கதாபாத்திரம்தான் என தற்போது தெரியவந்துள்ளது. டாக்டர், அம்மா என பரிமாணம் எடுக்கும் த்ரிஷா அசரவைக்கும் சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க உள்ளாராம். அது கட்டிப்பிடித்து உருண்டு முடியைப் பிடித்து பிய்த்து எடுக்கும் வழக்கமான குழாயடி சண்டைபோல இல்லாமல் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஸ்டைலிஷ் சண்டையாக இருக்கும் என்கிறார்கள்.
த்ரிஷாவோட அழகுல மயங்கி விழுந்தவங்க இனி ஆக்ஷனிலும் மயங்கி விழப்போறாங்க.


Click it and Unblock the Notifications











