திரிஷாவின் பிறந்தநாள்.. அடேங்கப்பா 42 வயதில் இத்தனை கோடி சொத்தா?.. ராணி வாழ்க்கைதான்
சென்னை: கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகையாக கோலோச்சிவரும் திரிஷா கடைசியாக குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதுதவிர்த்து மேலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிரசாந்த் - சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக தலை காண்பித்தவர் திரிஷா. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஹீரோயினாகும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மௌனம் பேசியதே, லேசா லேசா ஆகிய இரண்டு படங்களில் கமிட்டானார். அவற்றில் லேசா லேசா திரைப்படம் வெளியாவதற்கு தாமதமானது. அதேசமயம் மௌனம் பேசியதே படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் திரிஷாவின் கதாபாத்திரத்துக்கும் அவரது நடிப்புக்கும் நல்லதொரு வரவேற்பே கிடைத்தது.
டாப் ஹீரோயின்: அதற்கு பிறகு லேசா லேசாவும் வெளியாகி ஹிட்டாக அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ரவி மோகன் என தொடர்ந்து டாப் ஹீரோக்களோடு நடித்தார். மேலும் கமலுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் ரஜினியோடு மட்டும் நடிக்காமல் இருந்த அவருக்கு பேட்ட திரைப்படத்தின் மூலம் அந்த வாய்ப்பும் கிடைத்தது. இப்படி தொடர்ந்து தமிழில் டாப்பில் இருந்த அவர் தெலுங்குக்கு சென்று அங்கும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல நடிகை: திரிஷா வெறும் கிளாமர் ரோலை மட்டும் ஏற்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களிலும் நடித்தார். அந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் அட திரிஷாவால் கிளாமர் ரோலும் ஹோம்லி ரோலும் ஒரே நேரத்தில் செய்ய முடிகிறதே என்று ஆச்சரியப்பட்டார்கள். மேலும் அவரது கரியரிலும் அந்த படங்கள் முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்றன.
நோ திருமணம்: அவருக்கும் ராணா டகுபதிக்கும் காதல் என்று முதலில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் திரிஷா உறுதியாக இருந்தாலும்; வருண் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக உடனடியாக திருமணத்தை நிறுத்தினார் திரிஷா. அந்தத் திருமணம் நின்ற பிறகு இன்றுவரை சிங்கிளாகவே இருக்கிறார். அவரிடம் திருமணம் குறித்து கேட்டால் ஏதாவது ஒரு பதிலை சொல்லி தப்பித்துவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் சொல்வதுண்டு.
மீண்டும் ஃபார்மில் திரிஷா: இதற்கிடையே அவருக்கு கரியரில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. சுதாரித்துக்கொண்ட் அவர் 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தை மீண்டும் பிடித்தார். அந்த வகையில் இப்போது பிஸியாகியிருக்கும் அவர் கடைசியாக லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
திரிஷாவின் சொத்து மதிப்பு: அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு ஐந்திலிருந்து ஆறு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவர் ஹைதராபாத்தில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலும், சென்னையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும் சொகுசு பங்களாக்களை வைத்திருக்கிறாராம். மேலும் Mercedes Benz S Class, Range Rover, BMW 5 Series போன்ற விலையுயர்ந்த காரை வைத்திருக்கும் அவரிடம் மொத்தம் 120லிருந்து 130 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கும் பலரால் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











