பாக்யராஜ் குடும்பத்தையே தேற்றிய திரிஷா.. ஃபேமிலியில் ஒருத்தர் மாதிரி அவ்வளவு துக்கம்
சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் திடீரென நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 73. சில வாரங்களுக்கு முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்தார். இப்போது இவரும் மறைந்திருப்பது அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரை சாந்தனு கண்ணீரோடு வழியனுப்பி வைத்தார்.
இந்திய திரையுலகத்தில் திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் புகழப்படுபவர் பாக்யராஜ். தன்னுடைய ஸ்க்ரீன் ப்ளே மூலம் மட்டுமே படங்களை ஹிட்டாக்கிய அவர்; சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வந்தவர். அவரது படங்களுக்கு நம்பி செல்லலாம் என்ற எண்ணம் குடும்ப ரசிகரக்ளிடையே இருந்தது. அதன் காரணமாக அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இன்றுவரை அந்தப் படங்கள் பலரால் ரசிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

குஷ்பு மகள் திருமணத்தில் பாக்யராஜ்: சமீப காலமாக அவர் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அதில் இவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் அத்திருமணத்தில் அனைவருடன் சிரித்து பேசியிருந்துவிட்டு; சாப்பிட்டுவிட்டு தமிழ்நாடு வந்தடைந்தார். ஆரோக்கியமாகவே காட்சியளித்தார்.
உயிரிழந்த திரைக்கதை மன்னன்: ஆனால் நேற்று காலை வாக்கிங் சென்றுவிட்டு வந்த பிறகு லேசாக் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்ல; பதறிப்போன குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73 ஆகும். திடீரென அவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அரசு மரியாதையுடன் தகனம்: பாக்யராஜின் உடல் இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மின் மயானத்துக்கு பாக்யராஜின் உடலை எடுத்து சென்றபோது அந்தப் பாதையில் முத்தம் கொடுத்து கண்ணீருடன் தன் தந்தையை வழியனுப்பி வைத்தார் சாந்தனு. அது அங்கே இருப்பவர்களை கலங்க செய்தது.
திரிஷாவின் தேற்றுதல்: பாக்யராஜின் இறப்பை கேள்விப்பட்டு துடிதுடித்த திரிஷா நேற்று நேரில் சென்றார். அப்போது அங்கே சோகத்தில் இருந்த பாக்யராஜுடைய மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மருமகள் கிகி, மகள் சரண்யா ஆகியோரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லி தேற்றினார். பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொல்லியபோது திரிஷாவும் துக்கத்தில் கண்கள் கலங்கினார். அதை பார்த்த ரசிகர்கள், வேறு யாருடைய மரணத்துக்கும் திரிஷா இப்படி உடைந்ததில்லை; பாக்யராஜின் குடும்பத்தில் ஒருவர் மாதிரி நடந்துகொண்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
திரிஷா போஸ்ட்: முன்னதாக பாக்யராஜுக்கு இரங்கல் தெரிவித்த திரிஷா, "RIP பாக்யராஜ் சார். நேற்றுதான் நாம் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டோம். இன்று இந்த மனதை உடைக்கும் செய்தியை கேட்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பூர்ணிமா மேடம், சாந்தனு, அம்லு, கிகி உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், மன வலிமையும்" என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
