அசினோடு திரிஷாவுக்கு பிரச்னையா?.. விஜய்யுடன் நடித்தது காரணம்?.. அவங்களே என்ன சொல்லிருக்காங்க பாருங்க

சென்னை: நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இப்போது வந்திருக்கும் இளம் நடிகைகளுக்கே அசால்ட்டாக டஃப் கொடுக்கிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் கருப்பு, விஸ்வம்பரா ஆகிய இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. மேலும் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் திரைத்துறைக்குள் வந்த புதிதில் அசின் டாப்பில் இருந்தார். அப்போது அவருக்கும், அசினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்தது உண்டு.

திரிஷா, அசின், நயன்தாரா ஆகிய மூன்று பேருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். சில மாதங்களோ அல்லது வருடங்களோத்தான் முன்ன பின்ன இருக்கும். இப்போது அந்த மூன்று பேரையுமே தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியாவிலேயே தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர்களில் அசின் தனது கரியர் பீக்கில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். நயனும் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் தொடர்ந்து நடித்துவருகிறார். திரிஷா மட்டும் சிங்கிளாக இருக்கிறார்.

Trisha Breaks Silence on Asin Feud Rumours We Never Had Any Issues
Photo Credit:

ரூல் செய்யும் திரிஷா: இப்போதைய நிலவரப்படி நயனைவிடவும் திரிஷா ஒரு படி மேலே இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த வருடத்தில் மட்டும் அவர் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு படங்களிலும், கமலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாகவும் சூர்யாவுடன் கருப்பு, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 40 வயதுக்கு மேல் ஆகியும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடும் திரிஷாவை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி இளம் ஹீரோயின்களே ஆச்சரியப்படுகிறார்கள்.

Also Read
ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரே.. பிரச்னை ஓவர்.. எவ்வளவு க்யூட் பாருங்க
ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரே.. பிரச்னை ஓவர்.. எவ்வளவு க்யூட் பாருங்க

கடும் போட்டி: திரிஷா இப்போது மட்டுமின்றி திரைத்துறைக்குள் வந்ததிலிருந்தே போட்டிகளுக்கு மத்தியில்தான் தன்னை வளர்த்திருக்கிறார். அதன் காரணமாக அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும்; குருவி படத்தில்கூட முதலில் நயன்தான் கமிட்டானார். எப்படியோ திரிஷா உள்ளே புகுந்து வாய்ப்பை வாங்கிவிட்டார் என்று ஒரு தகவல் உண்டு. தங்களுக்குள் மோதல் இருந்ததாக நயனும் ஒரு பேட்டியில் கூறத்தான் செய்திருக்கிறார். இப்போதுதான் அவர்கள் ஒற்றுமையாகியிருக்கிறார்கள். அண்மையில்கூட சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.

அசினுடன் மோதல்?: நயனுடனான மோதலின்போதே அசினுடனும் திரிஷாவுக்கு கடும் மோதல் ஏற்பட்டதாக பேச்சு உண்டு. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தார்; அடுத்த படமான சிவகாசியில் அசின் நடித்தார். திரிஷா அளவுக்கு விஜய்யுடன் அதிக படங்களில் அசினும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அசின் பாலிவுட் பக்கம் சென்ற பிறகுதான் இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிகைகளில் அப்போது செய்திகாள் வந்திருக்கின்றன.

ட்ரெண்டாகும் திரிஷா பேட்டி: இந்நிலையில் அசின் குறித்து திரிஷா சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ திடீரென தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அசினுடன் எனக்கு மோதல் என்பது முற்றிலுமான வதந்தி. அசின் மட்டுமில்லை எந்த நடிகைகளுடனும் எனக்கு மோதல் வந்ததில்லை. வர்ஷம் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருது வென்றேன். அந்த விழாவில்தான் முதன்முறையாக அசினை நேரில் சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் வாழ்த்து தெரிவித்தார். எப்போதுமே எனக்கு அவருடன் எந்த சண்டையும் வந்ததில்லை.

அது காரணமாக இருக்கலாம்: ஆனால் மீடியாக்கள் அதனை உருவாக்கிவிட்டன. நாங்கள் ஒரே மாதிரியான படங்கள் செய்திருக்கிறோம். விஜய்யுடன் நான் ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படத்தில் அசின் நடிப்பார். விஜய் மட்டுமில்லை சூர்யா, விக்ரமிடமும் அப்படித்தான். எதையுமே நான் பெர்சனலாக எடுத்துக்கொண்டதில்லை. அவருடன் எனக்கு பெர்சனலாக கான்டாக்ட் இல்லை. அவர் ரொம்பவே ப்ரொஃபஷ்னலாக இருப்பார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X