சினிமாவிலிருந்து விலகலா?.. அவருடன் திருமணமா?.. மௌனம் கலைத்த திரிஷா.. ஓபனா சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும்; விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவிவருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட சோகமடைந்தார்கள். இப்படி தொடர்ந்து பரவும் தகவல்களுக்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இதன் காரணமாக அனைத்தும் உண்மைதானோ என்ற எண்ணமும் எழுந்தது. இந்நிலையில் அத்தனைக்கும் மௌனம் கலைத்திருக்கிறார் திரிஷா.
நடிகை திரிஷாதான் கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். விஜய் இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்; எனவே தனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே; விஜய்யுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்திறங்கினார் திரிஷா. எனவே இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் போல என்று பலரும் பேச தொடங்கிவிட்டார்கள்.

சுத்துப்போட்ட செய்தியாளர்கள்; தப்பித்த திரிஷா: அந்த சம்பவம் நடந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே திரிஷா மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார். அப்போது விஜய்யுடன் ஒன்றாக திருமணத்துக்கு சென்றது பற்றி செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் அவரோ எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் கூலாக அமைதியுடன் கடந்து சென்றுவிட்டார். அதற்கு பிறகும் அவர் இதுகுறித்து எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அந்த அமைதியை விஜய்யின் ரசிகர்கள் விரும்பவில்லை என்பதுதான் எதார்த்தம்.
சினிமாவிலிருந்து விலகுகிறாரா?: இது ஒருபக்கம் இருக்க திரிஷா விரைவில் சினிமாவிலிருந்து விலகப்போகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டுவிட்டார்கள். கருப்பு, விஸ்வம்பரா ஆகிய இரண்டு படங்கள்தான் கடைசி படம் என்றும் சில நாட்களாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் அரசியல் பிரவேசம் செய்யவிருக்கிறார். சினிமாவிலிருந்து விலகினால்தான் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்: இப்படி சில நாட்களாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும் திரிஷா எதுவும் சொல்லாமல் அமைதியே காத்துவந்தார். அவரது அமைதியை பார்த்த ரசிகர்களோ, ஆஹா வரும் தகவல்கள் எல்லாம் உண்மைதான் போல. அதனால்தான் அவர் அமைதியாக இருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள். மேலும் 20 வருட திரை பயணம் முடிவுக்கு வருகிறது என எமோஷனலாகவும் போஸ்ட் போட்டிருந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து மௌனம் கலைத்திருக்கிறார் திரிஷா.
திரிஷா போஸ்ட்: அவர் இந்த விஷயம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேனாம். நேற்றிலிருந்து இரண்டு குழந்தைகளையும் நான் வளர்த்துக்கொண்டு இருக்கிறேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா இல்லை இன்றைக்கான கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதன் மூலம் சினிமாவிலிருந்து திரிஷா விலகுவதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரது இந்தப் போஸ்ட் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதேபோல் விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும், 'நீங்கள் சினிமாவிலிருந்து விலகுவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்கள். அதேபோல் விஜய்யுடனான இருக்கும் விஷயம் பற்றியும் விளக்கமளிக்கலாமே என்று கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications















