மனம் சந்தோஷமாக இல்லை.. திரிஷாவுக்கு என்ன ஆச்சு?.. ரொம்ப ஃபீல் செய்றாங்க.. ஏன் அப்படி சொல்றாங்க?
சென்னை: நடிகை திரிஷா கடந்த சில வருடங்களாக எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் நண்பர்களுடனான ஜாலி டைம் உண்டு என இருந்தார். ஆனால் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஒரு திருமணத்துக்கு வந்ததிலிருந்து அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடுகின்றன. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு கீழே விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் சென்று, 'விஜய்யிடமிருந்து விலகிவிடுங்கள்' என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
திரிஷா பல வருடங்களாக டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவர் வளர்ந்துவந்த சமயத்தில் குளியல் வீடியோ, சில ஹீரோக்களுடனான கிசுகிசு, நிச்சயதார்த்தம் நடந்தது என சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதையெல்லாம் எளிதாக கடந்துவந்தார் அவர். அதனையடுத்து சின்ன சறுக்கலை சந்தித்த திரிஷா; அதனை சரி செய்துகொண்டு மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கினார். அந்தவகையில் பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், குட் பேட் அக்லி என பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் தோல்வியடைந்தன.

சர்ச்சைகள் திரிஷாவை சுற்றி: இருப்பினும் அவருக்கான மார்க்கெட் இன்னும் உயரத்தில்தான் இருக்கிறது. சூர்யாவை வைத்து தான் இயக்கும் கருப்பு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி திரிஷாவைத்தான் ஹீரோயினாக ஃபிக்ஸ் செய்திருக்கிறார். மேலும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்திலும் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் மே, ஜூலை மாதங்களில் வரவிருக்கின்றன. இப்படி பிஸியாக செல்கையில்; விஜய்யுடன் இணைத்து வைத்து மீண்டும் கிசுகிசுக்கள் பரவின. அப்படிப்பட்ட நிலைமையில் சங்கீதாவும் ஒரு நடிகையை குறிப்பிட்டிருந்தார்.
எல்லோருக்கும் அதிர்ச்சி: அந்த நடிகை திரிஷாவாக இருக்குமோ என பலர் சந்தேகப்பட்ட நிலையில்; விஜய்யுடன் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணம் ஒன்றுக்கு வந்திருந்தார். அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசுபொருளானது. பிரபுதேவாவுடன் நயன் காதலில் இருந்தபோது அவர் என்ன மாதிரியான பெயரை வாங்கினாரோ அதேபோன்ற பெயரைத்தான் இதில் திரிஷாவும் வாங்கியிருக்கிறார். எப்போதும் அடுத்தவர்களின் பெர்சனலில் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைக்கும் ஒருதரப்பினர் இதிலும் அப்படியே செய்கிறார்கள்.
திரிஷாவின் அமைதி: தன்னை சுற்றி பெரிய பிரளயமே ஏற்பட்டாலும் அதை அமைதியாக கடந்து செல்வதற்கு கற்றுக்கொண்டுவிட்டார் போல. அண்மையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அவர் சைலெண்ட்டாக சென்றுவிட்டார். அதேசமயம் இவ்விஷயம் இவ்வளவு பூதாகரமாகும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்றும்; இதனை இப்படியே அமைதியாக இருந்து கடந்து செல்வது என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள். ஆகமொத்தம், விஜய்யுடனான திரிஷாவின் முதல் வருகை அவரது திரை கரியரில் பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
உள்ளம் சந்தோஷமாக இல்லை: மேலும், சினிமாவிலிருந்து விலகவிருப்பதாகவும், விரைவில் திருமணம் என்றும் ஒரு பேச்சு ஓடியது. சில நாட்கள் அமைதியாக இருந்த அவர்; ஒருநாள் கொதித்து போய், 'உங்கள் கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா?' என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறார். அந்த வீடியோவில், 'நான் சந்தோஷமாக இருக்கிறேன்.. ஆனால் எனது உள்ளம் அப்படி இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். திரிஷாவின் உள்ளம் சந்தோஷமாக இல்லாததற்கு, சமீபத்திய சர்ச்சைகள்தான் காரணமாக இருக்கும் என பலர் யூகங்களை உருவாக்கியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications
