திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவுசெய்த த்ரிஷா
சென்னை: நடிகை த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர் தற்போது 11வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து மௌனம் பேசியதே படத்தில் நாயகியாக நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த மனசெல்லாம், லேசா லேசா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் சினிமாத்துறை நமக்கு ஒத்து வராது விலகிவிடலாம் என்று அவர் நினைத்தார். அப்போது தான் அவர் நடித்த சாமி படம் சூப்பர் ஹிட்டானது.
நல்ல காலம் அவசரப்பட்டு ஓடவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் த்ரிஷா. பின்னர் அவர் கமல் ஹாசன், விஜய், அஜீத் குமார், ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் த்ரிஷா ஓய்வின்றி தெலுங்கு, தமிழ் படங்கள் என ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருந்தார். கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் அவர் இன்னும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இளமையாக உள்ளார். மேலும் இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் பிசியான ஹீரோயினாக உள்ளார்.
இந்நிலையில் அவர் நடித்த சில படங்களைப் பார்ப்போம்...

சாமி
விக்ரம் நடித்த சாமி படம் தான் த்ரிஷாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதில் அவர் தைரியமான மாமியாக நடித்திருந்தார்.

கில்லி
கில்லி படத்தில் முதன்முதலாக விஜயுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. இந்த படத்தைப் பார்த்தவர்கள் அட இந்த ஜோடி சூப்பராக இருக்கிறதே என்றனர்.

ஆயுத எழுத்து
மணி ரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் என்றாலும் த்ரிஷாவின் நடிப்பு தனியாகத் தெரிந்தது.

திருப்பாச்சி
திருப்பாச்சி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அழகு பொம்மையாகத் தான் இருந்தது. விஜயை காதலித்து, டூயட் பாடிவிட்டு சென்றார்.

ஆறு
சூர்யா உள்ளூர் ரவுடியாக வந்த ஆறு படத்தில் த்ரிஷா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யாவுடன் நடித்த மௌனம் பேசியதே ஓடாததற்கும் சேர்த்து இந்த படம் ஓடியது.

உனக்கும் எனக்கும்
ஜெயம் ரவியுடன் சேர்ந்து த்ரிஷா குறும்புத்தனமாக நடித்த உனக்கும் எனக்கும் சூப்பர் ஹிட்டானது.

அபியும் நானும்
பிரகாஷ் ராஜின் செல்ல மகளாக த்ரிஷா நடித்த அபியும் நானும் தந்தை மகளுக்கு இடையேயான பாசத்தை அழகாகக் காண்பித்திருக்கும்.

விண்ணைத் தாண்டி வருவாயா
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் த்ரிஷா ஜெசியாக நடித்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. அந்த படத்தில் காட்டன் புடவையில் அழகாக வந்திருப்பார்.

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. படத்திலும் அவர் ஒரு நடிகை தான்.

மங்காத்தா
அஜீத் குமார் ஜோடியாக த்ரிஷா நடித்த படம் மங்காத்தா. அப்பாவி பெண்ணாக அருமையாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











