த்ரிஷாவுக்கு ட்விட்டரில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்!
நடிகை த்ரிஷாவை ட்விட்டரில் தொடருவோர் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் த்ரிஷா. பத்தாண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.

சமீபத்தில்தான் சிறந்த நடிகைக்கான சைமா விருதினைப் பெற்றார். கன்னடத்தில் அவர் நடித்த பூலோகம் படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழில் பூலோகம் படம் வெளியாகவிருக்கிறது.
அஜீத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர் த்ரிஷா. அவரது ட்விட்டர் பக்கத்தில், அவரைத் தொடருவோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications