இதுவரை செய்யாததை செய்யத் துடிக்கும் த்ரிஷா
Recommended Video

சென்னை: அவசரப்படாமல் நிதானமாக செயல்பட முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் ஹிட்டாகியுள்ளது. த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அது அமைந்துள்ளது.

ஒரு பெரிய கேப்பிற்கு பிறகு த்ரிஷாவுக்கு இந்த அளவுக்கு பெயர் கிடைத்துள்ளது என்று கூட கூறலாம். அவரின் ஜானு கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 96 படத்திற்கு பிறகு த்ரிஷாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகிறது.
அவர் தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை. மாறாக தான் இதுவரை நடித்திராத கதாபாத்திரங்களாக பார்த்து தேர்வு செய்கிறார். 96 படத்திற்கு முன்பு எப்படியோ ஆனால் அந்த படத்திற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளதாக அவர் உணர்கிறார்.
அதனால் அவசரப்படாமல் நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடம் வாங்கிய நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார். சினிமாவை தீவிரமாக காதலிக்கும் த்ரிஷா பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











