த்ரிஷா டம்மி பாவா.. குட் பேட் அக்லியில் ஹீரோயினா இருந்தும் நோ யூஸ்.. கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஷால், எஸ்ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இத்திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஆனால், இதில் சும்மா டம்மியா வந்து செல்வதாக நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

மௌனம் பேசியதே திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக, கன்னட சினிமாவில் ஒரு சில படத்தில் நடித்து வந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, மீண்டும் பீக்கிற்கு வந்த த்ரிஷா, விஜய்யின் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து கோட் படத்தில், விஜய்யுடன் ஒரு பாடலுக்கும் ஆட்டம் போட்டிருந்தார்.

Good Bad Ugly Trisha Ajith

நடிகை த்ரிஷா: அதன் பின் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடித்திருந்தார் அந்த படத்தில் பெரிய அளவில் மசாலா இல்லாததால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை. அதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகிய ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஒரு சில ரசிகர்களோ த்ரிஷா இந்தபடத்தில் டம்மியாக வந்து சென்று இருப்பதாகவும், அவருக்கு சரியான கதாபாத்திரமே கொடுக்கப்படவில்லை என்றும் இணையத்தில் கிண்டல் அடித்து வருகின்றன. இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக வரும் சிம்ரன், இரண்டு காட்சியில் மட்டுமே வருகிறார். ஆனால், அவர் வரும் காட்சியில் தியேட்டரிலேயே விசில் சத்தம் காதை பிளந்து மாஸான காட்சியாக இருந்தது.

Good Bad Ugly Trisha Ajith

டம்மி டாவா: இதே போல, மகனின் காதலியாக வரும் பிரியா வாரியரும் மூன்று காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஆனால், அவருக்கு தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலை போட்டு, ஹைப்பை ஏத்திவிட்டு, அவரை ஹை லைட்டாக காட்டி இருக்கிறார். இதனால், தற்போது பிரியா வாரியர் இணையத்தில் டிரெண்டாக இருக்கிறார். ஆனால், பாவம் இந்த த்ரிஷா, கதாநாயகியாக இருந்தாலும் ஒப்புக்கு வந்து செல்கிறார். இவருக்கும் ஏதாவது மனதில் தைக்கும்படி ஒரு சென்டிமென்ட் காட்சியையோ அல்லது ஒரு பாடல் காட்சியை கொடுத்து இருக்கலாம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏன் த்ரிஷாவிற்கு மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்துவிட்டார் என்றும், அப்படி என்ன த்ரிஷாவின் மேல் அவருக்கு கோபம் என்றும் கேட்டு வருகின்றனர். அதே போல, த்ரிஷாவின் தீவிர வெறியர்கள், முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என அவருக்கு இணையத்தின் வழியாக அன்பு வேண்டுகளை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X