நடிகை திரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு

By Mayura Akilan

கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக நடிகை திரிஷா அறிவித்துள்ளார். இதற்காக மிகவிரைவில் எளிமையான விழா ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

30 வயதான திரிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் அடி உயரமுள்ள பனி மலையில் கொண்டாடினாராம் அப்போது அவரது அம்மாவும் உடனிருந்தாராம்.

திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் கதாநாயகி வேடம்தான் இன்னமும் திரிஷாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இன்னமும் இளமையாக உடலை மெயின்டெயின் செய்கிறார்.

நான்கு படங்களில்

நான்கு படங்களில்

இப்போது ‘பூலோகம்', ‘என்றென்றும் புன்னகை', ‘ரம்' உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் பாண்டியன் இயக்கும் ‘ப்ரியம்' படத்தில் பூனம் பஜ்வா, ஓவியாவும் ஆகியோரிடன் நடித்து வருகிறார்.

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

நடிகையாக இருந்தாலும் இளகிய மனம் படைத்த திரிஷா விலங்குகளின் மீது அதீத அக்கறையும் பாசமும் கொண்டவர். இப்போது தன்னுடைய உடல் உறுப்புகளை ஆய்வுக்காக தானம் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

ரசிகைகளுடன் விழா

ரசிகைகளுடன் விழா

இந்த பிறந்த நாளில் எனது கண் மற்றும் உடல் உறுப்பு களை தானம் செய்ய எண்ணி இருந்தேன்.ஆனால் வெளி நாட்டில் இருந்ததால் அது முடியாமல் போனது. தற்போது நாடு திரும்பிவிட்டேன். மிக விரைவில் எளிமையான ஒரு நிகழ்ச்சியில் எனது கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளேன். அப்போது என்னுடன் எனது ரசிகைகள் பலரும் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் அதுபற்றி சொல்வேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X