உடல் உறுப்புகளைத் தானம் செய்தார் த்ரிஷா!
மண்ணு திங்கப் போற உடம்புதானே... மத்தவங்களுக்குப் பிரயோசனமாகவாவது இருக்கட்டுமே என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஓரளவு பரவ ஆரம்பித்திருக்கிறது.
இதற்கு பிரபலங்களின் உடல் உறுப்பு தானம் பற்றி மீடியாவில் அடிக்கடி வெளியாகும் செய்திகளும் முக்கிய காரணம்.

கமல் தொடங்கி வைத்தது
நடிகர்களில் முதல் முதலாக இந்த உடல் உறுப்பு தானம் செய்தவர் அநேகமாக கமல்ஹாஸன்தான். அவர் இப்படிச் செய்த பிறகுதான் பலரும் தாமாக முன்வந்து உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்ய ஆரம்பித்தனர். இன்றைய தேதிக்கு உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பது தமிழகம்தான்!

உடல் தானம்
இப்போது இந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் முன்னணி நடிகை த்ரிஷா. சமீபத்தில் அவர் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டார்.

பொது மக்களும்
தனது ரசிகர்கள் மற்றும் தன்னை நேசிக்கும் பொது மக்களும் இதே போல உடல் தானம் செய்ய வேண்டும் என்று த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக த்ரிஷா ரசிகர் மன்றம் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இன்றும் முன்னணியில்
10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, இன்றும் முதல் நிலை நடிகையாகத் திகழ்கிறார். தமிழில் அடுத்து வெளியாகும் அவர் படம் பூலோகம். அடுத்து அஜீத் ஜோடியாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் பேசி வருகிறார்கள்.

தெலுங்கில்
தெலுங்கில் மீண்டும் இரு படங்களில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. அவற்றில் ஒன்று பாலகிருஷ்ணா படம். அவர் புனீத் ராஜ்குமார் ஜோடியாக முதல் முதலாக நடித்த கன்னடப் படம் பவர் விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications










