Trisha: கெஸ் பண்ணது வீணா போகல.. ’மட்ட’ பாடலில் மறைச்சு வச்ச த்ரிஷா.. விஜய்யுடன் செம குத்தாட்டம்!

சென்னை: யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான கோட் படத்தின் பாடல்களுக்கு தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், 4வது பாடலாக 'மட்ட' பாடல் வெளியானது. ஆளப்போறான் தமிழன், வெறித்தனம் உள்ளிட்ட பாடல்களை விஜய்க்காக எழுதிய பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியிருந்தார்.

விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கண்டிப்பாக இந்த பாடலில் தான் த்ரிஷா ஆடியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பாடலின் லிரிக் வீடியோ வெளியான போது, த்ரிஷாவை ஒரு சீனில் கூட காட்டவில்லை.

goat trisha vijay

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என த்ரிஷாவும் அந்த பாடலை ஷேர் செய்யவோ, ட்வீட் போடவோ இல்லை. இந்நிலையில், 'மட்ட' பாடலில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்களுடன் விஜயகாந்தின் இன்ட்ரோவை லீக் செய்தது போல ரசிகர்கள் த்ரிஷாவின் கேமியோவையும் லீக் செய்து விட்டனர்.

மீனா முதல் கிரண் வரை: நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் இடம்பெற்ற "உன் தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா" என்கிற பாடலுக்கு நடிகை ரோஜா குத்தாட்டம் போட்டிருப்பார். ஷாஜகான் படத்தில் வரும் "சரக்கு வச்சிருக்கேன்" பாடலில் மீனா போட்ட குத்தாட்டத்தை எல்லாம் ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். ஆல் தோட்ட பூபதி பாடலில் சிம்ரன் நடனமாடிய நிலையில், திருமலை படத்தில் வரும் ஜக்கம்மாவாக கிரண் கலக்கியிருப்பார். சிவகாசி படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், தற்போது கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

goat trisha vijay

கெஸ் பண்ணது வீண் போகல: "கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணுக்குள்ள இருக்கா" என விவேக் எழுதிய பாடல் வரிகளை வைத்தே நிச்சயம் கோட் படத்தில் த்ரிஷா நடனமாடியிருப்பார் என்றும் லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் நான் ரெடி தான் வரவா பாடலில் டான்ஸ் ஆடியதை ரகசியமாக வைத்திருந்தது போல மட்ட பாடலில் விஜய்யுடன் த்ரிஷா ஆடியதை வெங்கட் பிரபு மறைத்து வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் என ஏற்கனவே கெஸ் பண்ண நிலையில், தற்போது அந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா குத்தாட்டம் போட்டுள்ளார்.

லீக் பண்ண ஃபேன்ஸ்: விஜயகாந்தின் ஓபனிங் காட்சியையே ரசிகர்கள் லீக் செய்தது போல தற்போது விஜய்யுடன் த்ரிஷா நடனமாடிய காட்சியின் ஸ்டில்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். படமே லீக் ஆனாலும், தளபதி ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று படத்தை பார்த்து கொண்டாடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைப்பார்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

விஜய் - அஜித்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து லிப் கிஸ் எல்லாம் அடித்து நடித்த த்ரிஷா அடுத்ததாக அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். கோட் படத்திலும் த்ரிஷாவின் கேமியோ டான்ஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில், அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் சென்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஐடென்டிடி படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X