மெக்ஸிக்கோவில் மஜா பண்ணும் த்ரிஷா.. கவர்ச்சி உடையில் செம ஹாட்டா ஒரு வீடியோ போட்டுருக்காங்க!
சென்னை: நடிகை த்ரிஷா மெக்ஸிக்கோவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட ஹாட் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் கதாபாத்திர போஸ்டர்களிலேயே பளிச்சென அழகாக இருந்தது த்ரிஷாவின் போஸ்டர் மட்டும் தான் என ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

சம்மர் சுற்றுலா
மார்ச் மாதமே தனது சம்மர் சுற்றுலாவை மெக்ஸிகோவில் தொடங்கி விட்டார் நடிகை த்ரிஷா. சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்த நடிகை த்ரிஷா சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வனுக்கு வெயிட்டிங்
அனுஷ்கா, நயன்தாரா எல்லாம் வரலாற்று படங்களில் நடித்த நிலையில், நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படம் மூலம் வரலாற்று கதாபாத்திரம் குந்தவை பிராட்டியராக விரைவில் காட்சி தர காத்திருக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு ரசிகர்களை போலவே த்ரிஷாவும் காத்திருக்கிறார்.

மெக்ஸிகோவில் த்ரிஷா
இந்நிலையில், மெக்ஸிகோ நாட்டில் தனது கோடை விடுமுறையை கொண்டாட ஆரம்பித்துள்ள நடிகை த்ரிஷா அங்கே சொகுசு படகு ஒன்றில் எடுத்துள்ள தனது வீடியோ க்ளிப் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். உடலை ஒட்டியபடியான மயில் நீல நிற உடையை அணிந்து கொண்டு இருக்கும் த்ரிஷா செம ஹாட்டாக கொடுத்துள்ள போஸை ரசிகர்கள் ரசித்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

செனோரிட்டான்னு சொல்றாங்க
மெக்ஸிகோவில் தன்னை செனோரிட்டான்னு கூப்பிடுறாங்க என த்ரிஷா கொடுத்துள்ள கேப்ஷனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஸ்பானிஷ் மொழியில் செனோரிட்டா என்றால் திருமணம் ஆகாத அழகான பெண் என்று அர்த்தம். சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஓ செனோரிட்டா என ஒரு பாடலே இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் விசா
சமீபத்தில், நடிகை த்ரிஷாவுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை அளித்து கெளரவப்படுத்தியது. பாலிவுட் நடிகர்கள், மலையாள நடிகர்களை தொடர்ந்து முதல் தமிழ் நடிகையாக நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பிரியையான த்ரிஷா துபாய் டூரை எல்லாம் முடித்து விட்டு தற்போது மெக்ஸிகோ பக்கம் திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











