வீக் என்ட் ஆனாலே மஜாதான்.. திரிஷா யாரோடு பார்ட்டி செஞ்சிருக்காங்க பாருங்க.. அந்த நடிகையும் இருக்காங்க
சென்னை: கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா இந்த வருடத்தில் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவை தவிர்த்து தெலுங்கிலும் கமிட்டாகியிருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துவரும் விஸ்வம்பரா திரைப்படம் அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் பார்ட்டி செய்த புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் திரிஷா. இதன் காரணமாக தமிழில் அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய திரிஷாவுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் அடிமையானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது சிரிப்பு, நடிப்பு, அழகு என அத்தனையையும் ரசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சறுக்கல் டூ எழுச்சி: ஒரு நடிகை என்றாலே இடையில் சில சறுக்கல் வருவது இயல்புதான். அந்த சறுக்கல் திரிஷாவுக்கும் வந்தது. ஆனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர்; கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து ரூட்டை மாற்றினார். அப்படி அவர் நடித்த 96 படம் பெரிய கம்பேக்கை அவருக்கு கொடுக்க; மீண்டும் திரிஷா தீ கோலிவுட்டில் பற்றிக்கொண்டது. அப்போதிருந்து திரிஷா மீண்டும் எழுச்சி கொள்ள ஆரம்பித்தார்.

டாப் ஹீரோக்களுடன் ஜோடி: திரிஷாவுக்கு இப்போது 42 வயது ஆகிறது. இப்போதும் படு இளமையாக இருக்கும் அவர் அஜித், கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த வருடம் மட்டும் அவர் நடிப்பில் தமிழில் மொத்தம் மூன்று படங்கள் ரிலீஸாகின. மூன்று படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லையென்றாலும்; இத்தனை வருடங்கள் கழித்தும் இப்படி அவருக்கு வாய்ப்புகள் வருவதை பார்த்து மற்றவர்கள் கொஞ்சம் பொறாமைப்படத்தான் செய்வார்கள்.
திருமணம் நோ: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்து திருமணம் நின்ற சூழலில்; இப்போதுவரை சிங்கிளாக இருக்கிறார். அவர் விரைவில் திருமணம் செய்வாரா இல்லை காலம் முழுக்க சிங்கிளாக இருப்பாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
பார்ட்டி செய்யும் திரிஷா: ரிலேஷன்ஷிப்பில் அவர் சிங்கிளாக இருந்தாலும் ப்ரெண்ட்ஷிப்பில் எப்போதும் பெரிய கேங்காகவே இருப்பவர் திரிஷா. அவரது கேங்கில் ரம்யா கிருஷ்ணன், ஆர்த்தி ரவி, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி உள்ளிட்டோர் எல்லாம் அடக்கம். இவர்கள் வீக் எண்ட் ஆனால் சேர்ந்து பார்ட்டி செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் நேற்றிரவு சிட்னி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிலருடன் பார்ட்டி செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார் திரிஷா. அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











