»   »  திலீப்பை மறுத்த திரிஷா

திலீப்பை மறுத்த திரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil


மலையாளத்தில் திலீப் நடிக்க உருவாகவுள்ள ரோமியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டாராம் திரிஷா.

மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்து மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் திலீப். அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்கள். கேரளாவில் அவருக்கென்று தீவிரமான ரசிகர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

தற்போது அவர் 5 படங்களில் நடித்து வருகிறார். 6வதாக ரோமியோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு கொச்சியில் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.

இப்படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடிக்க கடந்த வாரம் திரிஷாவை அணுகியுள்ளனர். ஆனால் உடனடியாக மறுத்து விட்டாராம் திரிஷா. இது மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஆனால் இதற்கு திரிஷா விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து திரிஷா கூறுகையில், திலீப்பின் முக்கியத்துவம், அவரது திறமை, ரசிகர்கள் கூட்டம் என எல்லாமே எனக்குத் தெரியும். நானும் கூட திலீப்பின் விசிறிதான் (அப்படிப் போடு போடு)

ஆனால் இப்போது என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் நான் மிகவும் பிசியாக உள்ளேன். 2008ம் ஆண்டு இறுதிக்குப் பிறகுதான் என்னால் கால்ஷீட் தர முடியும் (அடேங்கொப்பா)

எனது கால்ஷீட் டைட் காரணமாக, தமிழ், தெலுங்குப் படங்கள் சிலவற்றையும் கூட நான் நிராகரித்துள்ளேன். நாகார்ஜூனாவுடன் தெலுங்கில் நடிக்க வந்த படத்தைக் கூட நான் வேண்டாம் என்று சொல்லியுள்ளேன். இந்தப் படத்தை இயக்குகிறவர் பிரபுதேவா. அவரது படத்தையே என்னால் ஏற்க முடியவில்லை.

இதுதான் திலீப் படத்தை நிராகரிக்க காரணம். வேறு விசேஷமான காரணம் எதுவும் இல்லை. மிகப் பெரிய நடிகர் ஒருவருடன் நடிக்க வரும் வாய்ப்பை எந்த நடிகையும் மறுக்க மாட்டார், அதற்கு காரணம் இல்லை என்றார் திரிஷா.

திரிஷா சொல்வதை திலீப் ஏற்றார் போலத் தெரியவில்லை. ஆனால் அதற்காக கவலைப்படும் அளவுக்கு திரிஷாவுக்கும் நேரமில்லை!

Read more about: dileep trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil