கௌதமின் நாயகி ஆகாமல் த்ரிஷா ஓயமாட்டார் போல
சென்னை: கௌதம் மேனனின் படத்தில் எப்படியாவது ஹீரோயினாகிவிட வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் த்ரிஷா.
கௌதம் மேனின் விண்ணைத் தாண்டி வருவாயா படம் த்ரிஷாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. படத்தில் காட்டன் புடவையில் வந்த த்ரிஷாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அதன் பிறகு அவர் கமலுடன் சேர்ந்து நடித்த மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சமரும் ஊத்திக் கொண்டது.

3 படங்கள்
தற்போது அவர் பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

துருவ நட்சத்திரம்
கௌதம் மேனன் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த துருவ நட்சத்திரத்தில் ஹீரோயினாக த்ரிஷா விரும்பினார். ஆனால் படமே கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சரத்குமார்
கௌதம் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் தான் நடிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். அது துருவ நட்சத்திரத்தின் கதையா என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு
சரத்குமாரை வைத்து படம் எடுத்த பிறகு கௌதம் சிம்புவை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷா
இந்த 2 படங்களில் நாயகி வாய்ப்பை பெற கௌதம் மேனனை துரத்துகிறாராம் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷா கௌதம் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











