த்ரிஷா எங்கடா காணோம்.. கோட் 4வது சிங்கிளை பார்த்து அப்செட்டான குந்தவை ஆர்மி.. அப்படி போடு இல்லையா?
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி கூட கிளைமேக்ஸில் வருவார் என எதிர்பார்கக்ப்படுகிறது.
கோட் படத்தின் 4வது சிங்கிளான ’மட்ட’ பாடல் இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என சொன்னதில் இருந்தே விஜய் மற்றும் த்ரிஷா ஆடிய பாடல் தான் என பலரும் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

ஆனால், 'மட்ட.. மட்ட.. ராஜமட்ட’ பாடல் வெளியான நிலையில், த்ரிஷா எங்கடா காணோம் என குந்தவை ஆர்மியினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஷாக்கான வெங்கட் பிரபு: கோட் படத்தின் 4வது சிங்கிள் வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபுவிடம் த்ரிஷா ஆடிய பாடல் தான் வருகிறதா? என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், த்ரிஷா நடிச்சிருக்காங்களா என வெங்கட் பிரபுவே ஷாக் ஆகி கேட்டிருந்தார்.
லியோ படத்தில் லிப் லாக்: விஜய்யுடன் கில்லி படத்தில் ஜோடி சேர்ந்த நடிகை த்ரிஷா தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார். அதன் பின்னர், விஜய்யுடன் பல ஆண்டுகளாக ஜோடி சேராமல் இருந்து வந்த அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான லிப் லாக் காட்சி மிகப்பெரிய ஷாக்கை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது.
த்ரிஷா எங்கடா காணோம்?: கோட் படத்தின் 4வது சிங்கிளில் விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடனமாடியிருக்கும் பாடல் தான் வெளியாகப் போகிறது என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், விஜய் மட்டுமே தனியாக குருவி படத்தில் வரும் டண்டன்னா டர்ணா போன்ற செட்டில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த த்ரிஷா ரசிகர்கள் த்ரிஷாவை காணவில்லையே, அப்போ வெளியான தகவல் எல்லாம் உருட்டா கோபால் எனக் கேட்டு அப்செட் ஆகியுள்ளனர்.
கண்ணதாசன் சொன்ன பொண்ணு: கோட் படத்தின் 4வது சிங்கிளின் லிரிக் வீடியோவில் த்ரிஷாவை காட்டவில்லை என்றாலும், பாடலாசிரியர் விவேக் வரிகளில்,
“என்னா நட என்னா நட
ஏறி வரா ஜிலுக்கா
கண்ணதாசன் சொன்ன பொண்ணு
கண்ணு முன்ன இருக்கா
ஊறவிட்ட தேனுக்கட
மாரடப்பு குடுத்தா
மன்மதனே அம்பெடுத்து
தன்னக் குத்தி கெடக்கான்” உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா என்கிற வரிகளை நோட் செய்து த்ரிஷா கண்டிப்பாக படத்தில் ஆடியிருக்கிறார் என்றும் லியோ படத்தின் நான் ரெடி தான் வரவா பாடலில் மடோனா செபாஸ்டியனை மறைத்து வைத்ததை போல த்ரிஷாவை மறைத்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் த்ரிஷா கண்டிப்பா இருக்கிறார் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











