அடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! - த்ரிஷா

By Shankar

Trisha
ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா.

அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட.

ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.

இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது.

இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, "அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X