"ஓட்டுப் போடறது பெரிய கடமை... மும்பைலருந்து வந்தேன்!" - த்ரிஷா
சென்னை: தன் அம்மா உமாவுடன் வாக்குச் சாவடிக்குப் போய் ஓட்டுப் போட்டார் நடிகை த்ரிஷா.
இந்தத் தேர்தலில் முன்னணி நடிகைகள் பலரும் வாக்களிக்கவில்லை என்று கூறப்பட்டது. காரணம் தமிழகத்தில் இவர்களில் பலருக்கு ஓட்டு இல்லை. ஹன்சிகா தன் சொந்த ஊரில் வாக்களித்ததாகக் கூறப்பட்டது.

தமிழ்நாட்டு அரசியலில் கால்பதிக்க முயலும் நமீதா போன்றவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாக்களிக்க சூரத் போனாரா, சென்னையிலேயே தங்கிவிட்டாரா என்ற தகவலும் இல்லை!
ஆனால் தமிழ் நடிகையான த்ரிஷா தனது வாக்கைப் பதிவு செய்ய மும்பையிலிருந்து ப்ளைட் பிடித்து வந்திருக்கிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக வீடு சென்றவர், உடனடியாக டிடிகே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.
அவருடன் தாயார் உமாவும் வந்து வாக்களித்தார். வாக்களித்து முடித்ததும் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
"ஓட்டுப் போடறது பெரிய கடமை. அதை மிஸ் பண்ணக்கூடாதுன்னுதான் மும்பைலருந்து வந்தேன்," என்றார் த்ரிஷா.
வாழ்க, அந்த கடமை உணர்வு!


Click it and Unblock the Notifications











